140 அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

140 அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

மதுரை: சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் 140 அரசு வழக்​கறிஞர் பதவிக்கு ஜூன் 29-க்​குள் விண்​ணப்​பிக்க அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம் மதுரை அமர்​வில் 8 கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​கள், 2 அரசு பிளீடர்​கள், 28 சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், 44 கூடு​தல் அரசு வழக்​கறிஞர்​கள், 54 அரசு வழக்​கறிஞர்​கள் (உரிமை​யியல்), 4 அரசு வழக்​கறிஞர்​கள் (வரி) என மொத்​தம் 140 அரசு வழக்​கறிஞர்​கள் தேர்வு செய்​யப்​பட​வுள்​ளனர். இதில் 99 பேர் சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்​கும், 44 பேர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வுக்​கும் நியமிக்​கப்பட உள்​ளனர்.

இப்​ப​தவிக்கு வழக்​கறிஞர்​கள் விண்​ணப்​பிக்க அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. விண்​ணப்​பங்​களை ஜூன் 29 மாலை 5.45 மணிக்​குள் ஆன்​லைன் மூலம் சமர்ப்​பிக்க வேண்​டும் எனக் அறிவிக்கப்​பட்​டுள்​ளது.

140 அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
“லஞ்சம், ஊழல்தான் செய்யக் கூடாது; சிபாரிசு செய்வதில் தவறில்லை” - அமைச்சர் விஸ்வநாதன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in