“லஞ்சம், ஊழல்தான் செய்யக் கூடாது; சிபாரிசு செய்வதில் தவறில்லை” - அமைச்சர் விஸ்வநாதன் கருத்து

காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்

காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்

Updated on
1 min read

திருவாரூர்: லஞ்​சம் வாங்​கக் கூடாது, ஊழல் செய்​யக் கூடாது. அதேநேரம், சிபாரிசு செய்​வதில் தவறு இல்லை என உயர் கல்​வித் துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன் தெரி​வித்​தார்.

திரு​வாரூரில் காங்​கிரஸ் கட்சி சார்​பில் மாநில உயர் கல்​வித் துறை அமைச்​சரும், திரு​வாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்​சரு​மான விஸ்​வ​நாதனுக்கு வரவேற்​புக் கூட்​டம் நேற்று முன்​தினம் கட்​சி​யின் மாவட்​டத் தலை​வர் நீலன் அசோகன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

கூட்​டத்​தில் அமைச்​சர் விஸ்​வ​நாதன் பேசி​யது: உயர் கல்​வித் துறை அமைச்​ச​ராக நான் பொறுப்பு வகிப்​ப​தன் மூலம் ஒவ்​வொரு காங்​கிரஸ்​காரரும் உயர் கல்​வித் துறை அமைச்​சர் என்​பதை மனதில் நிறுத்​திக் கொள்ள வேண்​டும். காங்​கிரஸார் அதி​காரி​களை சந்​திக்க வேண்​டும். அவர்​களிடம் தன்​னடக்​க​த்​துடன் நடந்து கொள்ள வேண்​டும். 60 ஆண்​டு​களுக்​குப் பிறகு காங்​கிரஸ் கட்​சி​யினர் ஆட்​சிக்கு வந்​துள்​ளதை அதி​காரி​கள் விரும்​பு​கின்​றனர்.

காம​ராஜர், கக்​க​னைப்​போல லஞ்​சம் வாங்​காத அரசி​யல் பாதை​யில் நாம் அனை​வரும் செல்ல வேண்​டும். லஞ்​சம் வாங்​கக் கூடாது, ஊழல் செய்​யக் கூடாது என்​று​தான் சொன்​னேனே தவிர, சிபாரிசு செய்​யக் கூடாது என்று நான் சொல்​ல​வில்​லை. சிபாரிசை புறக்​கணிக்​கிறவர் தலை​வ​ராக இருக்க முடி​யாது. இது​தான் ஜனநாயகம். சிபாரிசு என்​பது ஜனநாயகத்​தில் அங்​கீகரிக்​கப்​பட்ட எழுதப்​பட்ட விதி. அதை யாராலும் மாற்ற முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

முழு​மை​யான தகு​தி​யின் அடிப்​படை​யிலேயே எந்த ஒரு பணி​யிலும் முன்​னுரிமை வழங்​கப்​படும் என ஆட்சி குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலை​யில், அமைச்​சர​வை​யில் உள்ள காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த அமைச்​சர் விஸ்​வ​நாதன் சிபாரிசு செய்​வது தவறில்லை என்று பேசியிருப்​பது சமூக ஆர்​வலர்​கள் அதிர்ச்சி தெரி​வித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்</p></div>
“தவெக அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் வெளியேறுவோம்” - திருமாவளவன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in