உள்படம்: ராம.ரவிக்குமார்

உள்படம்: ராம.ரவிக்குமார்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தடை கோரி மேல்முறையீடு

உச்ச நீதிமன்றத்தில் ராம.ரவிக்குமார் மனு தாக்கல்
Published on

புதுடெல்லி: ​திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்ற விதிக்​கப்​பட்ட நிபந்​தனை​களுக்கு தடை கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் ராம.ரவிக்​கு​மார் சார்​பில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

மதுரை திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனின் உத்​தரவை ரத்து செய்​யக் கோரி​யும், அதற்கு தடை விதிக்​கக் கோரி​யும் கோயில் செயல் அலு​வலர், மதுரை ஆட்​சி​யர், அறநிலை​யத் துறை, சிக்​கந்​தர் தர்கா நிர்​வாகம் உட்பட 26 மேல்​முறை​யீட்டு மனுக்​கள் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மனுக்​களை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்வு அளித்த தீர்ப்​பில், திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணிலும் கோயில் நிர்​வாகம் தீபம் ஏற்ற வேண்​டும்.

நிபந்தனை வகுக்க வேண்டும்: மலை​யில் உள்ள நினை​வுச் சின்​னங்​களைப் பாது​காக்க பொருத்​த​மான, அவசி​ய​மான நிபந்​தனை​களை மத்​திய தொல்​லியல் துறை வகுக்க வேண்​டும். கார்த்​திகை தீபத் திரு​விழா​வின்​போது கோயில் நிர்​வாகம் தீபத் தூணில் விளக்​கேற்ற வேண்​டும். தீபம் ஏற்​றச் செல்​லும் கோயில் தரப்பு குழு​வுடன் பொது​மக்​களை அனு​ம​திக்​கக் கூடாது.

தீபம் ஏற்​றும் குழு உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய தொல்​லியல் துறை மற்​றும் போலீ​ஸாருடன் ஆலோ​சித்து முடிவு செய்ய வேண்​டும். தீபம் ஏற்​றும் நிகழ்வை மாவட்ட ஆட்​சி​யர் ஒருங்​கிணைத்து மேற்​பார்​வை​யிட வேண்​டும் என்று தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த நிபந்​தனை​களுக்கு தடை கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் சார்​பில் வழக்​கறிஞர் ஜி.​பாலாஜி மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

மனுவில், உயர்​நீ​தி​மன்ற இரு நீதிப​தி​கள் அமர்​வின் நிபந்​தனை​கள், அரசமைப்பு சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​களை மீறும் வகை​யில் உள்​ளன. எனவே, உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

<div class="paragraphs"><p><em><strong>உள்படம்:&nbsp;ராம.ரவிக்குமார்</strong></em></p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 ஜனவரி 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in