

மேஷம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.
மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலைச்சல் குறையும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: சோர்வு நீங்கி செயலில் வேகம் கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து புதுப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
சிம்மம்: பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டி குறையும். கடையை புது இடத்துக்கு மாற்ற முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் நீங்கும். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்: திட்டமிட்ட காரியங்களை போராடி முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டம் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
தனுசு: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மகரம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: தடுமாற்றம் நீங்கும். குழப்பம் விலகி மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.
மீனம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். உடன் பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவர். பணவரவால் கடன்களை பைசல் செய்வீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.