நெல் மூட்டை அரவையில் ரூ.11 கோடி முறைகேடு? - 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

1,793 மெட்ரிக் டன் நெல் மாயம் என தகவல்
நெல் மூட்டை அரவையில் ரூ.11 கோடி முறைகேடு? - 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Updated on: 
1 min read

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​துக்கு சொந்​த​மான நெல் மூட்​டைகளைத் தனியார் அரிசி ஆலைகளில் அரைத்து அரி​சி​யாகப் பெறும் நடைமுறை​யில், சுமார் ரூ.10.84 கோடி முறைகேடு நடை​பெற்​றதாக எழுந்த புகாரின் அடிப்​படை​யில், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் 11 இடங்​களில் ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பிரிவு போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர்.

அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவசாயிகளிட​மிருந்து கொள்​முதல் செய்​யப்​படும் நெல் மூட்​டைகள், தனியார் நவீன அரிசி ஆலைகளுக்கு அரவைக்​காக அனுப்பி வைக்​கப்​படும்.

அங்கு நெல் அரைக்​கப்​பட்டு, அதற்​குரிய அளவில் அரிசி நுகர்​பொருள் வாணிபக் கழகத்​திடம் ஒப்​படைக்​கப்​பட வேண்​டும். இந்த நடைமுறை​யில் காஞ்​சிபுரம் மண்​டலத்​தில் முறைகேடு நடை​பெற்​றதாகப் புகார் எழுந்​தது.

இது தொடர்​பாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், காஞ்​சிபுரம் மண்​டல மேலா​ளராகப் பணி​யாற்​றிய அருள் வனிதா, தரக்​கட்​டுப்​பாட்டு உதவி மேலா​ளர் ஜெய​வேல் மற்​றும் 4 தனியார் அரிசி ஆலை உரிமையாளர்​கள் இணைந்து செயல்​பட்டு 1,792.633 மெட்​ரிக் டன் நெல் பற்​றாக்​குறையை ஏற்​படுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

இத​னால் நுகர்​பொருள் வாணிபக் கழகத்​துக்கு ரூ.10 கோடியே 84 லட்​சத்து 47 ஆயிரத்து 484 இழப்பு ஏற்​பட்​ட​தாக ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இதையடுத்து அருள் வனிதா, ஜெய​வேல் ஆகிய இரு​வரும் இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். இது தொடர்​பாக காஞ்​சிபுரம் ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கின் தொடர்ச்​சி​யாக காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் திம்​மசமுத்​திரம், சிறுகாவேரிப்​பாக்​கம், முசர​வாக்​கம் உள்​ளிட்ட பகுதி​களில் செயல்​பட்டு வரும் 9 நவீன அரிசி ஆலைகள் மற்​றும் தொடர்​புடைய இடங்​களி​லும், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் அருள் வனிதாவின் வீட்​டிலும், திரு​வள்​ளூர் மாவட்​டம் திருத்​தணி​யில் ஜெய​வேலின் வீட்​டிலும் என மொத்​தம் 11 இடங்​களில் ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பிரிவு போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

இந்​தச் சோதனை​யின்​போது முறைகேடு தொடர்​பான ஏதேனும் ஆவணங்​கள், நெல் மற்​றும் அரிசி இருப்பு விவரங்​கள், கொள்​முதல் மற்​றும் அரவை தொடர்​பான பதிவு​கள் உள்​ளனவா என போலீ​ஸார் ஆய்வு செய்து வரு​கின்​றனர். சோதனை​யின் முடி​வில்​தான் முழு​மையான விவரங்​கள் தெரிய​வரும் என போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

நெல் மூட்டை அரவையில் ரூ.11 கோடி முறைகேடு? - 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ரூ.100 கோடி பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக மின்வாரியத்தில் புதிய டெண்டர் குழு அமைப்பு: நிதி அதிகாரம் இருமடங்காக உயர்வு

X