அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

திருவள்ளூர்: பெரிய​பாளை​யம் அருகே உள்ள கடல் உணவு பதப்படுத்​தும் தனி​யார் நிறு​வனத்​தில் ஏற்​பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் ஏற்​கெனவே 15 பேர் உயி​ரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் தொழிலா​ளர் நேற்று உயி​ரிழந்தார். இதனால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்​பட்டு வரும் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனத்​தில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது. இதில், ஓய்வு மற்​றும் பணி​யில் இருந்த 83 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல் பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன.

பாதிக்​கப்​பட்​ட​வர்​கள், மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். இதில், ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த 12 பெண்​கள், அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த 2 பெண்​கள், ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த ஒரு பெண் என, 15 பெண் தொழிலா​ளர்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த கப்​பிட்டா ஜுவாங்கா (24) என்ற பெண் நேற்று உயி​ரிழந்​தார். இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை 16 ஆக அதி​கரித்​துள்​ளது.

அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு
சென்னை: கொடுங்கையூர் அருகே வீடு புகுந்து காதலி கண்முன்னே பிரபல ரவுடி படுகொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in