‘வீ த லீடர்ஸ்' அமைப்பின் அடுத்த 3 மாத செயல் திட்டம்: மக்களை ஒருங்கிணைக்க அண்ணாமலை வியூகம்

பெண்கள் பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பை வலுப்படுத்த இலக்கு
‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை

‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை

Updated on
1 min read

சென்னை: பெண்​கள் பாது​காப்பு மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களை வலுப்​படுத்​து​வதை இலக்​காகக் கொண்​டு, அடுத்த 3 மாதங்​களில் தமிழகம் தழு​விய பயிற்சி மற்​றும் விழிப்​புணர்வு பணி​களை அண்​ணா​மலை​யின் ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்பு முன்​னெடுத்து வரு​கிறது.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பு, ஒவ்​வொரு மாத​மும் ஒரு குறிப்​பிட்ட சமூகப் பிரச்​சினையை மைய​மாகக் கொண்​டு, தமிழகம் முழு​வதும் விழிப்​புணர்வு பணி​களை முன்​னெடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில், அடுத்த 3 மாதங்​களுக்​கான திட்​டங்​கள் தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, செப்​டம்​பர் மாதத்​தில் ‘பெண்​கள் பாது​காப்பு மற்​றும் அதி​காரமளித்​தல்’ என்ற கருப்​பொருளு​டன் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்பட உள்​ளன.

இதில், பாது​காப்​பற்ற பொது இடங்​களை அடை​யாளம் கண்டு சரிசெய்​தல், போக்​கு​வரத்து பயணங்​களில் உள்ள பாது​காப்பு இடைவெளி​களைக் குறைத்​தல், அவசர​கால உதவி மற்​றும் ஆதரவு பெறு​வ​தில் உள்ள தடைகளை நீக்​குதல், சமமற்ற பொருளா​தார வாய்ப்​பு​களைச் சீரமைத்​தல்,தலை​மைப் பொறுப்​பு​களில் பெண்​களின் பிர​தி​நி​தித்​து​வத்தை அதிகரித்​தல் ஆகியவை அடங்​கும்.

அக்​டோபர் மாதம் ‘இளைஞர் திறன் மேம்​பாடு மற்​றும் அதி​காரமளித்​தல்’ என்ற தலைப்​பில் நிகழ்ச்​சிகள் நடை​பெற உள்​ளது. இது இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு மற்​றும் வழி​காட்​டு​தலை நோக்​க​மாகக் கொண்​டது.

நவம்​பர் மாதம் ‘பஞ்​சா​யத்து அமைப்​பு​களை வலுப்​படுத்​துதல்’ என்ற பெயரில் உள்​ளாட்​சித் தேர்​தலை முன்​னிறுத்தி விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட உள்​ளது. அதன்​படி, கிராமப்​புற நிர்​வாகத்​தில் மக்​கள் பங்​களிப்பை அதி​கரித்​தல், உள்​ளாட்​சிப் பொறுப்​பு​களில் உள்ள தெளிவற்ற தன்​மையை நீக்​குதல், உள்​ளூர் தரவு​களைப் பெறு​வ​தில் உள்ள சிக்​கல்​களைச் சரிசெய்​தல், நிர்​வாக முடிவு​களில் வெளிப்​படைத்​தன்​மையை உறுதி செய்​தல், எடுக்​கப்​பட்ட முடிவு​களைத் தொய்​வின்றி செயல்​படுத்​துதல் ஆகிய 5 அம்​சங்​களில் இந்த அமைப்பு கவனம் செலுத்​த உள்​ளது.

இந்த விழிப்​புணர்வு பணி​களை அந்​தந்​த துறையைச் சார்ந்த வல்​லுநர்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​களைக் கொண்டு தமிழகம் முழு​வதும் கொண்​டு​செல்ல அண்​ணா​மலை திட்​ட​மிட்​டுள்​ளார்.

இதன்படி, உள்​ளாட்​சித் தேர்​தலுக்கு முன்​பாக, மக்​கள்பிரச்​சினை​களில் நேரடியாகத் தலை​யிட்​டு, அதி​கப்​படி​யான மக்​களை ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் கீழ் ஒருங்​கிணைப்​பதே அண்​ணா​மலை​யின்​ முக்​கிய வியூகமாகப் ​பார்​க்​கப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை</p></div>
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்பு ஆஜர்: செந்தில் பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in