டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்பு ஆஜர்: செந்தில் பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு என குற்றச்சாட்டு
 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Updated on
1 min read

சென்னை: டாஸ்​மாக் முறை​கேடு வழக்கு தொடர்​பாக, செந்​தில் பாலாஜி​யிடம் லஞ்ச ஒழிப்​புத்​ துறை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்​போது, ‘இது அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் போடப்​பட்ட வழக்​கு’ என செய்​தி​யாளர்​களிடம் செந்​தில் பாலாஜி தெரி​வித்​தார்.

கடந்த திமுக ஆட்​சிக்​காலத்​தில் டாஸ்​மாக் நிறு​வனத்​தில் நடை​பெற்ற டெண்​டர் மற்​றும் மது​பானக் கொள்​முதல் பணி​களில் ரூ.1,000 கோடிக்​கும் மேலாக ஊழல் நடை​பெற்​ற​தாக அமலாக்​கத் ​துறை குற்​றம்​சாட்​டி​யிருந்​தது. இதுதொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​ துறை​யும் தனி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தீவிரப்​படுத்​தி​யது. முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, முன்​னாள் டாஸ்​மாக் மேலாண்மை இயக்​குநர் விசாகன் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்​புத்​ துறை வழக்​குப்​ப​திவு செய்​தது.

இதன் தொடர்ச்​சி​யாக, கடந்த ஜூலை மாதம் செந்​தில் பாலாஜி​யின் வீடு, அவர் தொடர்​புடைய இடங்​கள் மற்​றும் டாஸ்​மாக் அதி​காரி​களின் அலு​வல​கங்​கள் என மொத்​தம் 45 இடங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு லஞ்ச ஒழிப்​புத்​ துறை அவருக்கு சம்​மன் அனுப்​பியது. அதன்​படி, நேற்று காலை 10.55 மணிக்கு ஆலந்​தூரில் உள்ள லஞ்ச ஒழிப்​புத்​ துறை அலு​வல​கத்​தில் செந்​தில் பாலாஜி ஆஜரா​னார்.

ஏடிஎஸ்பி தலை​மையி​லான போலீ​ஸார், செந்​தில் பாலாஜி​யிடம் சுமார் மூன்​றரை மணி நேரம் விசா​ரணை நடத்​தினர். இந்த விசா​ரணை​யின்​போது, டெண்​டர் முறை​கேட்​டில் கூட்​டுச்சதி புகார், உரிமம் புதுப்​பிக்​கப்​ப​டா​மல் பார்​கள் செயல்​பட்​டது, மது பாட்​டிலுக்கு கூடு​தலாக 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலித்​தது மற்​றும் ‘கட்சி நிதி’ வசூலில் ஈடு​பட்​டது தொடர்​பான குற்​றச்​சாட்​டு​கள் உள்​ளிட்ட 100-க்​கும் மேற்​பட்ட கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன. செந்​தில் பாலாஜி அளித்த பதில்​களை லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் எழுத்​துப்​பூர்​வ​மாக​வும், வீடியோ பதி​வாக​வும் பதிவு செய்​துள்​ளனர்.

விசா​ரணை முடிந்து வெளியே வந்த செந்​தில் பாலாஜி, செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இது அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால், உள்​நோக்​கத்​தோடு பதி​யப்​பட்ட வழக்​கு. தவெக அரசு பொறுப்​பேற்ற பிறகு, மக்​கள் நலத்​திட்​டங்​களில் கவனம் செலுத்​து​வதைவிட, எதிர்க்​கட்​சி​யினர் மீது வழக்​குத் தொடுப்​ப​திலேயே அதிக முனைப்பு காட்டி வரு​கிறது. சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்​குப் பதில் சொல்​லத் தெரி​யாமல் தவெக அரசு திணறுகிறது.

உண்​மையை மறைப்​ப​தற்​காகச் சட்​டப்​பேர​வைக்​குள் கூச்​சல் குழப்​பங்​களை ஏற்​படுத்​தி, அவையைத் திசை​திருப்ப அமைச்​சர்​கள் முயற்சி செய்​கிறார்​கள். கேள்வி​களுக்​குப் பதில் சொல்ல தைரியம் இல்​லாமல், குதர்க்​க​மான வார்த்​தைகளைப் பயன்​படுத்​துகிறார்கள்.

‘எதை​யும் மறைக்க மாட்​டேன், நேர்​மை​யாக நடப்​பேன்’ எனப் பதவிப் பிர​மாணம் எடுத்த முதல்​வர், தன் கையில் வைத்​துள்ள 3 கோப்​பு​களை வெளி​யிடத் தயங்​கு​வது ஏன்? நாங்​கள் சவால் விட்டு 24 மணி நேரம் கடந்​தும் இன்​னும் எந்​தக் கோப்​பும் வெளிவர​வில்​லை. ஏனெனில், உண்​மை​யில் அவர்​களிடம்​ அப்​படி எந்​தக்​ கோப்பும்​ இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p> செந்தில் பாலாஜி</p></div>
திருமலையில் உள்ள தனியார் ஓட்டல்களில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in