தமிழகத்தில் மாற்றம் வரும்: அண்ணாமலை நம்பிக்கை

தமிழகத்தில் மாற்றம் வரும்: அண்ணாமலை நம்பிக்கை

கோவை பீளமேட்டில் உள்ள கல்லூரியில் வாக்கு செலுத்திய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை.

Updated on
1 min read

கோவை: தமிழகத்​தில் நல்ல ஒரு மாற்​றம் வரும் என்று முழு​மை​யாக நம்​பு​கிறேன் என பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்ணாமலை தெரி​வித்​தார்.

கோவை பீளமேட்​டில் உள்ள தனி​யார் கல்​லூரி வாக்​குச்​சாவடி​யில் வாக்​களித்​த​பின் அண்​ணா​மலை செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் நல்ல ஒரு மாற்​றம் வரும் என்று முழு​மை​யாக நம்​பு​கின்​றேன்.

அதே சம​யம், கடந்த இரண்டு மூன்று நாட்​களாக வாக்​குக்கு பணம் கொடுத்​தல் போன்​றவை வாக்​குப்​ப​திவுக்கு இடையூறு ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்​னை​யில் இருந்து தென் தமிழகத்​துக்கு செல்​லக் ​கூடிய பேருந்து வசதி​கள் குறை​வாக இருக்​கின்​றன.

இவ்​விவ​காரத்​தில் தேர்​தல் ஆணை​யம் இன்​னும் சிறப்​பாக செய்​திருக்​கலாம். பணம், பரிசுப் பொருட்​கள் அனைத்​தும் ஒரே நாளில் வரவில்​லை. முன்​னரே கொண்டு வந்து எங்கோ ஒரு இடத்​தில் பதுக்கி விநி​யோகிக்​கின்​றனர்.

எஸ்ஐஆர் பணி​கள் அனைத்​தும் நேர்​மை​யான முறை​யில் நடந்​தது. வாக்​குக்கு பணம், பொருட்​கள் தைரிய​மாக கொடுக்​கின்​றனர். தேர்​தலுக்கு மூன்று மாதத்துக்கு முன்பே தேர்​தல் ஆணை​யம் கட்​டுப்​பாட்​டில் எடுக்க வேண்​டிய நிலை உள்​ளது.

தேர்​தல் அன்று கூட பல இடங்​களில் திமுக தனது சாஃப்ட் பிரச்​சா​ரத்தை செய்​கிறது. தேர்​தல் ஆணை​யம் இதை கண்​காணித்து தீவிர​மாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தமிழகத்தில் மாற்றம் வரும்: அண்ணாமலை நம்பிக்கை
நாங்குநேரி அருகே இரட்டை கொலை நடந்த பெரும்பத்து, வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in