சாமானிய மனிதருக்​கான ஓர் அரசியல் இயக்கம்: அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அண்ணாமலை விளக்கம்

“புதி​தான ஒரு தலை​முறையை அரசி​யலுக்கு கொண்​டுவர வேண்டும்”
டெல்லியிலிருந்து நேற்று சென்னை  திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated on
2 min read

சென்னை: ​பாஜக​வில் இருந்து வெளி​யேறி ஆனந்​த​மாக, அன்​போடு தமிழகத்​தில் ஓர் அரசி​யல் இயக்​கத்தை அனை​வருட​னும் இணைந்து தொடங்​கு​கிறேன். இந்த இயக்​கம், கட்​சி​யாக மாறி, தமிழகத்​தில் அடுத்து நடக்​கக்​கூடிய பொதுத் தேர்​தலில் போட்​டி​யிடும் என்று அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார்.

பாஜக​வில் இருந்து வில​கிய அண்​ணா​மலை புதிய அரசி​யல் இயக்​கம் தொடங்​கி​யுள்​ளார். இதுதொடர்​பாக நேற்று மதி​யம் காணொலி வாயி​லாக சமூக ஊடகங்​களில் அவர் பேசி​ய​தாவது: கடந்த 2020-ம் ஆண்டு ஆக.25-ம் தேதி பாஜக​வில் இணைந்​தேன். பாஜக​வில் தமிழக மக்​களுக்​காக 6 ஆண்டு காலம் பணி​யாற்​று​வதற்கு கிடைத்த வாய்ப்பை பெரிய பாக்​கிய​மாக கருதுகிறேன். நான் எந்த இடத்​தில் பாஜக​வில் இணைந்​தேனோ, அதே இடத்​தில் மரி​யாதையோடு, பண்​போடு, அன்​போடு பாஜக​வில் இருந்து இன்று வெளி​யேறுகிறேன்.

நான் பாஜக​வில் இணைவதற்கு ஒரு நாள் முன்​பு, நடிகர் ரஜினி​காந்த் என்னை செல்​போனில் தொடர்பு கொண்​டு, தனது இயக்​கத்​தில் இணைய வேண்​டும் என்று வேண்​டு​கோள் விடுத்​தார். ஆனால், அவரது இயக்​கத்​தில் இணைய மறுத்​து​விட்​டு, நான் பாஜக​வில் சேர்ந்​தேன். ‘தேர்​தலில் பாஜக தனித்​துப் போட்​டி​யிட வேண்​டும். தமிழகத்​தின் அடை​யாளத்​தோடு பாஜக இருக்க வேண்​டும்’ என்று விரும்​பினேன். அதனால்​தான் தேசி​யத் தலை​வர்​களிடம் பேசி, உள்​ளாட்​சித் தேர்​தல், மக்​கள​வைத் தேர்​தலில் தனித்து நின்​றோம். தனிப்​பட்ட முறை​யில் எனக்​கும், இன்​னொரு கட்​சிக்​கும் எந்த பிரச்​சினை​யும் இல்​லை.

பாஜக தமிழர் அடை​யாளத்​தோடு களத்​தில் இருந்​தால் மட்​டும்​தான், அது தமிழர் நலனை முன்​னிறுத்​தும் கட்​சி​யாக, இந்​திய அடை​யாளத்​தோடு இருக்க முடி​யும். அந்த வகை​யில், கடந்த 18 மாதங்​களாக எனக்கு இருக்​கக்​கூடிய கருத்து வேறு​பாடு​களை பாஜக தலை​வர்​களிடம் மிக பொறுமை​யாக எடுத்​துச் சொல்லி வந்​தேன்.

அதே​நேரம், கடந்த 2025 டிச.4-ம் தேதி ‘‘பாஜக​வில் இருந்து நான் வெளியே செல்ல இருக்​கிறேன்’’ என்று தெரி​வித்​து, தேர்​தல் முடி​யும் வரை காத்​திருந்​தேன். தற்​போது, பாஜக​வில் இருந்து வெளி​யேறி, ஆனந்​த​மாக, அன்​போடு தமிழகத்​தில் ஓர் அரசி​யல் இயக்​கத்தை அனை​வருட​னும் இணைந்து தொடங்​கு​கிறேன். இந்த இயக்​கம், கட்​சி​யாக மாறி, தமிழகத்​தில் அடுத்து நடக்​கக்​கூடிய பொதுத் தேர்​தலில் போட்​டி​யிடும். அதற்கு நாம் தயா​ராக வேண்​டும். நிறைய தலை​வர்​கள், தொண்​டர்​கள், தன்​னார்​வலர்​களை அதற்கு தயார்​படுத்த வேண்​டும். அவர்​களுக்கு அதற்​கேற்ற திறனை உரு​வாக்​கித் தரவேண்​டும். அதற்கு சற்று அவகாசம் தேவைப்​படும்.

தமிழகத்​துக்கு இப்​போது ஒரு புதிய அரசி​யல் கட்சி தேவை​தான். நாம் அனை​வரும் முட்​டாள்​தன​மான அரசி​யலில் இருந்து வெளியே வர வேண்​டும். சாமானிய மனிதருக்​கான ‘காமன் மேன்’ அரசி​யலை முன்​னிறுத்த வேண்​டும். நம் இயக்​கத்​தைப் பொருத்​தவரை, எல்​லோருக்​கும் அரசி​யலில் வாய்ப்பு தரப்​படும். அதனால், ஒரு​வர் எத்​தனை முறை எம்​.பி., எம்​எல்ஏ ஆக இருக்​கலாம் என்ற கால​வரம்பு கொண்டு வரப்​படும். நான் உட்பட இயக்​கத்​தில் உள்ள அனை​வருக்​கும் இது பொருந்​தும். நிரந்தர எம்​எல்ஏ, நிரந்தர எம்​.பி., நிரந்​தரத் தலை​வர் என்​பதை எல்​லாம் நாம் உடைப்​போம். நாம் ஆரம்​பிக்​கும் இயக்​கம், கட்​சி​யாக மாறும் நாளில் இதை சொல்​வோம். ஏற்​கெனவே கடந்த 2020-ம் ஆண்டு http://www.wetheleader.org என்ற அமைப்பு தொடங்​கப்​பட்​டுள்​ளது. இந்த அரசி​யல் இயக்​கத்​தில் நீங்​களும் உங்​களை இணைத்து கொள்ள வேண்​டும்.

அனை​வரை​யும் அரசி​யலுக்கு கொண்டு வரு​வதற்​காக, அறம் சார்ந்த அரசி​யலை முன்​னெடுப்பதற்​காக கோவை​யில் ‘ஏபிஜே. அப்​துல்​கலாம் சென்​டர் ஃபார் எத்​திக்ஸ் இன் பாலிடிக்​ஸ்’ என்ற பெயரில் பயிற்சி வழங்​கப்​படும். உள்​ளாட்​சித் தேர்​தலுக்கு நிறைய வேட்​பாளர்​களை இங்​கிருந்து நாம் அனுப்​புவோம். நல்ல அரசி​யலை சொல்​லிக்​கொண்டே வரு​வோம். நாம் அனை​வரும் சாதாரண மனிதர்​கள்.

தொழில​திபர்​களோ, நட்​சத்​திர அந்​தஸ்து உடைய​வர்​களோ இல்​லை. அதே​போல, பாரம்​பரிய​மான அரசி​யல் கட்​சியை ஆரம்​பித்து யாரும் அதை நம்​மிடம் தூக்​கிக் கொடுத்​து​விட​வில்​லை. நாம் அனை​வரும் கஷ்டப்​பட்டு ஒவ்​வொரு படி​யாகத்​தான் இந்த இயக்​கத்தை எடுத்​துச் செல்ல வேண்​டும். எனவே, என்​னோடு பயணிக்க நினைக்​கும் அனை​வருக்​கும் கொஞ்​சம் பொறுமை, நிதானம் வேண்​டும்.

புயலுக்கு சாயக்​கூடிய கட்​டிடத்தை நாம் கட்​டப்​போவது கிடை​யாது. எனவே, மாற்​றுக் கட்​சி​யில் இருந்​தா​லும், யார் வேண்​டு​மா​னாலும் என்​னுடன் வந்து இணை​ய​லாம். முதலில் நாம் மாறு​வோம், பிறகு மாற்​றம் தன்​னால் நடக்​கும். ‘மாறு​வோம், மாற்​று​வோம்’ என்​பது​தான் நம் இயக்​கத்​தின் கொள்​கை.

சமூக வலை​தளங்​களைப் பயன்​படுத்​துபவர்​கள் ‘வாரியர்ஸ்’ அல்ல. என்​னைப் பொருத்​தவரை மாற்​றத்​தைக் கொடுக்க கூடிய​வர்​கள்​தான் ‘வாரியர்​ஸ்’. களத்​தில் சண்டை போடு​வது நமது வேலை இல்​லை. மாற்​றத்​தைக் கொடுப்​பது​தான் நம் வேலை. அதனால்​தான் சமூக ஊடகங்​களில் வந்து பேசுகிறேன்.

ஜென்​-ஸி இளைஞர்கள்: புதி​தான ஒரு தலை​முறையை அரசி​யலுக்கு கொண்​டுவர வேண்​டும். அவர்​களை ஒதுக்கி வைக்க முடி​யாது. ஜென்​-ஸி, ஜென் ஆல்ஃபா இளைஞர்​களின் வேகத்​துக்கு நாம் தீனி போட வேண்​டும். திமுக, அதி​முக, தவெக, நாதக, மதி​முக, தேமு​திக, பாமகவை எப்​படி பார்க்​கிறேனோ, அதே​போலத்​தான் பாஜகவை​யும் பார்ப்​பேன். பாஜக மீது வன்​மம் எது​வும் கிடை​யாது. தரம் பார்த்து மக்​கள் நம்மை தேர்ந்​தெடுப்​பார்​கள் என்ற நம்​பிக்கை எனக்கு இருக்​கிறது. நாட்​டிலேயே தமிழகத்​தை முதன்​மை மாநில​மாகக்​ கொண்​டுவரு​வ​தே நமது குறிக்​கோள்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>டெல்லியிலிருந்து நேற்று சென்னை  திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p></div>
“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in