“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக பதிவாகியுள்ளதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து மிக வலுவாக இருப்பதையே இந்த எண்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக உள்ளது. 2025-26 நிதியாண்டின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 7.7 சதவீதமாகவும், அதன் நான்காவது காலாண்டில் 7.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இது நமது பொருளாதாரத்தின் உள்ளார்ந்த பலத்தையும், நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் வெற்றியையும், 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் மற்றும் நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தரவுகளின்படி, மாற்றியமைக்கப்பட்ட புதிய ஜிடிபி வரிசையின் கீழ், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த 2025-26 நிதியாண்டின் வருடாந்திர வளர்ச்சி 7.7 சதவீதத்தை எட்டியுள்ளது. உலகளாவிய புவிசார் அரசியல் அபாயங்கள், எரிசக்தி சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிலையற்ற உலகப் பொருளாதாரச் சூழல் போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்
“பெண்கள் வெறும் கவர்ச்சிப் பொருளா?” - ‘பெத்தி’ படக்குழுவுக்கு குவியும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in