அன்னதான திட்டம் 10 கோயில்களில் விரிவாக்கம்: பயனாளிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு

அன்னதான திட்டம் 10 கோயில்களில் விரிவாக்கம்: பயனாளிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் 10 கோயில்களில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் அன்​ன​தானத் திட்​டத்​தில் பயனாளி​களின் எண்​ணிக்​கையை இரு மடங்​காக விரிவுபடுத்தி இந்து சமய அறநிலை​யத்​துறை அனு​மதி அளித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, அறநிலை​யத்​துறை ஆணை​யர் டி.ஜி.​வினய் பிறப்​பித்​துள்ள உத்​தரவு: சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யின்​போது வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பின்​படி, கோயில்​களில் செயல்​படுத்​தப்​படும் அன்​ன​தானத் திட்​டத்​தின் பயனாளி​கள் எண்​ணிக்​கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, கோவை மாவட்​டம் பேரூர் பட்​டீசுவரசு​வாமி கோயில், காஞ்​சி மாவட்​டம் குன்​றத்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில், திருப்​பூர் மாவட்​டம் சிவன்​மலை சுப்​பிரமணி​யசு​வாமி கோயில் ஆகிய கோயில்​களில் தற்​போது நாள்​தோறும் 100 பேருக்கு வழங்​கப்​படும் அன்​ன​தானம், இனி 200 பேருக்கு வழங்​கப்​படும்.

காஞ்​சி தேவ​ராஜசு​வாமி கோயி​லில் 75 பேருக்கு வழங்​கப்​படும் அன்​ன​தானம் 150 பேருக்கு விரிவுபடுத்​தப்​படு​கிறது. கோவை மாவட்​டம் பெரியத​டாகத்​தில் உள்ள அனு​வாவி சுப்​பிரமணி​யசு​வாமி கோயில், பூண்டி வெள்​ளி​யங்​கிரி ஆண்​ட​வர் கோயில், காஞ்​சிபுரம் ஏகாம்​பர​நாத சுவாமி கோயில், சென்னை சூளை​யில் உள்ள அங்​காள பரமேசுவரி மற்​றும் காசி விஸ்​வ​நாதசு​வாமி கோயில் ஆகிய 4 கோயில்​களில் 50-ல் இருந்து 100 ஆக உயர்த்​தப்​படு​கிறது.

மேலும், ஈரோடு மாவட்​டம் சென்​னிமலை சுப்​பிரமணி​ய சு​வாமி கோயில் மற்​றும் திருச்சி மாவட்​டம் வயலூர் சுப்​பிரமணி​யசு​வாமி கோயில் ஆகிய​வற்​றில் தற்​போது நாள்​தோறும் 100 பேருக்கு அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது.

இந்​தக் கோயில்​களில் செவ்​வாய்க்​கிழமை, கிருத்​தி​கை, வளர்​பிறை சஷ்டி, அமா​வாசை, பங்​குனி உத்​திரம், தைப்​பூசம் உள்​ளிட்ட முக்​கிய நாட்​களில் 200 பேருக்கு அன்​ன​தானம் வழங்க அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதற்கிடையே, குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை அமைச்சர் ரமேஷ் நேற்று தொடங்கி வைத்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.

அன்னதான திட்டம் 10 கோயில்களில் விரிவாக்கம்: பயனாளிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்வெட்டு: செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in