காவல் துறையினரின் குறைகளை தீர்க்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி

Updated on
1 min read

சென்னை: ‘​காவல்துறையினரின் பதவி உயர்வு உள்​ளிட்ட அனைத்து குறை​களை​யும் தீர்க்க வேண்​டும்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவல்​துறை​யில் பணி​யாற்​றும் காவலர்​கள் முதல் ஆய்​வாளர்​கள் வரையி​லான நிலை​யில் உள்​ளவர்​களுக்கு சிறப்பு ஊதி​யம், இரவு நேரப் பணிக்​கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறை​யில் பணி​யாற்​றும் விரல் ரேகை வல்​லுநர்​களுக்கு வழங்​கப்​படு​வ​தில்​லை. இந்த பாகு​பாடு களை​யப்பட வேண்​டும்.

இதற்​காக சிறப்​புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்​துக்​குள் அறிக்கை பெற்​று, காவல்​துறை​யினரின் அனைத்து குறை​களை​யும் தமிழக அரசு தீர்க்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>பாமக தலைவர் அன்புமணி</em></p></div>
விமானப் படை தேர்வில் ஆள்மாறாட்டம்: ஆவடியில் ஹரியானா இளைஞர்கள் 4 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in