விமானப் படை தேர்வில் ஆள்மாறாட்டம்: ஆவடியில் ஹரியானா இளைஞர்கள் 4 பேர் கைது

ஆவடி விமானப்படை நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற விமான படை பணிக்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா இளைஞர்கள் தீபக், அனில், சவான், கவுரவ்.

ஆவடி விமானப்படை நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற விமான படை பணிக்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா இளைஞர்கள் தீபக், அனில், சவான், கவுரவ்.

Updated on
1 min read

ஆவடி: ஆவடி விமானப் படை நிலை​யத்​தில் நேற்று முன் தினம் நடை​பெற்ற விமானப் படை பணி​களுக்​கான எழுத்​துத் தேர்​வில் ஆள்​மாறாட்​டம், மின்​னணு சாதனங்​கள் மூலம் முறை​கேடு செய்ய முயற்​சித்​த​தாக ஹரி​யானா இளைஞர்​கள் 4 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி​யில் உள்ள விமானப்​படை நிலை​யத்​தில், விமானப் படை​யில் காலி​யாக உள்ள எழுத்​தர், வாகன ஓட்​டுநர் பணி​களுக்​கான எழுத்​துத் தேர்வு நேற்று முன்தினம் நடை​பெற்​றது.

இதில், தமிழகம் மட்​டுமின்றி, பல மாநிலங்​களைச் சேர்ந்தவர்கள் பங்​கேற்றனர். அப்​போது, தேர்வு மைய பாது​காப்பு பணி​யில் இருந்த அதி​காரி​களுக்​கு, தேர்வு எழுத வந்த இளைஞர்​கள் சிலர் மீது சந்​தேகம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர்​களிடம் விமானப் படை அதி​காரி​கள் தீவிர சோதனை மற்றும் விசா​ரணை​யில் ஈடு​பட்​டனர்.

அதில், ஹரி​யானா மாநிலம், ஜிந்த் மாவட்​டத்​தைச் சேர்ந்த கவுரவ் (21) என்​பவர், அமன் குமார் என்​பவருக்​குப் பதிலாக​வும், அனில் (27) என்​பவர், சுனில் என்​பவருக்கு பதிலாக​வும் ஆள்​மாறாட்​டம் செய்து தேர்வு எழுத முயன்​றதும், அவர்​கள் வைத்​திருந்த ஆவணங்​கள் போலி​யானவை என்​பதும் தெரிய வந்​தது.

மேலும், ஹரி​யானா மாநிலத்​தைச் சேர்ந்த சவான் (25), தீபக் (24) ஆகியோர் தேர்​வில் சட்​ட​விரோத தகவல் பரி​மாற்​றம் செய்ய ஜிஎஸ்​எம் டிரான்​ஸ்​மிட்​டர் பாக்ஸ் (GSM Transmitter Box) என்ற தடை செய்​யப்​பட்ட மின்​னணு சாதனங்​களை பயன்​படுத்​தி, தேர்வு எழுதி முறை​கேடு செய்ய முயற்​சித்​தது அதி​காரி​களின் ஆய்​வில் தெரிய வந்​தது.

இதுகுறித்​து, ஆவடி விமானப் படை அதி​காரி சத்​யேந்​திரகு​மார் அளித்த புகாரின் பேரில், முத்​தாப்​புதுப்​பேட்டை போலீ​ஸார், 4 சட்​டப்​பிரிவு​களின் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

அதன் அடிப்​படை​யில், கவுரவ், அனில், சவான், தீபக் ஆகியோரை நேற்று முன் தினம் இரவு போலீ​ஸார் கைது செய்​து, போலி ஆவணங்​கள், மின்​னணு சாதனங்​கள், மொபைல் போன்​கள் உள்​ளிட்​ட​வற்றை பறி​முதல் செய்​தனர்.

கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு ஆவடி விமானப் படை நிலை​யத்​தில் நடந்த விமானப் பணிக்​கான தேர்​வில் ஆள்​மாறாட்​டத்​தில் ஈடு​பட்ட வடமாநில இளைஞர் ஒரு​வர் கைது செய்​யப்​பட்​ட நிலை​யில்​, தற்​போது இச்​சம்​பவம்​ நடை​பெற்​றுள்ளது.

<div class="paragraphs"><p>ஆவடி விமானப்படை நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற விமான படை பணிக்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா இளைஞர்கள் தீபக், அனில், சவான், கவுரவ்.</p></div>
நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் வேகமாக வளரும் பொருளாதாரம்: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in