கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் அமோனியா அகற்றும் பணி

கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் அமோனியா அகற்றும் பணி
Updated on
1 min read

திரு​வள்​ளூர்: அமோனியா வாயுக் கசிவு விபத்து ஏற்​பட்ட கன்​னிகைப்​பேர் தனி​யார் நிறு​வனத்​தில் அமோனியா வாயு அகற்​றும் பணி 4-வது நாளாக இன்று தொடர உள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்​பட்டு வந்த இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனத்​தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

இந்த விபத்​தில் பாதிக்​கப்​பட்ட 83 பேரில், கடந்த 2-ம் தேதி இரவு வரை 18 பெண் தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். திரு​வள்​ளூர் மாவட்ட இரு தனி​யார் மருத்​து​வ​மனை​கள், சென்​னை​யில் உள்ள இரு அரசு மருத்​து​வ​மனை​கள் என, 4 மருத்​து​வ​மனை​களில் 51 பேர் சிகிச்சை பெற்​று, தங்​குமிடத்​துக்கு திரும்​பினர். மற்ற 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தனி​யார் நிறு​வனத்​தின் சேமிப்பு தொட்​டிகளில் இருப்பு வைத்​திருந்த 2 டன் அமோனியா வாயுவை அகற்​றும் பணி, கடந்த 4-ம் தேதி தொடங்​கியது.

தொழில்​நுட்ப வல்​லுநர் குழு மூலம் நடை​பெற்ற இப்​பணி​யில், கடந்த 4, 5 நாட்​களில் 2 டன் அமோனியா வாயு தொட்​டிகளில் இருந்து அகற்​றப்​பட்​டு, டேங்​கர் லாரி​யில் நிரப்​பப்​பட்​டது. இந்த லாரி நேற்று அதி​காலை சென்​னை, மணலி​யில் உள்ள மெட்​ராஸ் பெர்​டிலைசர் லிமிடெட் நிறு​வனத்​துக்கு அனுப்​பப்​பட்​டது.

இப்​பணிக்​காக கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் கட்​டுப்​பாடு​கள் தளர்த்​தப்​பட்​ட​தால், தனி​யார் நிறு​வனம் அமைந்​துள்ள சென்​னை-​திருப்​பதி தேசிய நெடுஞ்​சாலையில் (716), சாலை​யின் இரு திசை​யிலும், தலா 300 மீட்​டர் தூரத்​துக்கு நேற்று ஒரு வழி பாதை​யில் வாகன போக்குவரத்து இருந்​தது; கடைகள் உள்​ளிட்​டவை வழக்​கம்​போல் செயல்பட தொடங்​கின.

அமோனியா வாயுவை அகற்​றும் பணி 3-வது நாளாக நேற்று நடை​பெற்​றது. இதில், குளிரூட்​டும் அறை, பதப்​படுத்​தும் கிடங்கு உள்​ளிட்ட இடங்​களில் குழாய்​களில் தேங்​கி​யுள்ள வாயுவை, சல்​பியூரிக் ஆசிட் மூலம் தூய்​மைப்​படுத்தி முழு​மை​யாக அகற்​றும் பணி நடை​பெற்​றது.

காலை 9 - மாலை 5 மணிவரை நடை​பெற்ற அப்​பணி, முடிவுக்கு வரவில்​லை. ஆகவே, அமோனியா வாயு அகற்​றும் பணி 4-வது நாளாக இன்​றும் தொடர உள்​ளது.

பாது​காப்​பாக அமோனியா வாயு அகற்​றும் பணிக்​காக 4-வது நாளாக இன்று மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம், தொழில​கப் பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்​ககம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவற்றை சேர்ந்​தவர்​கள் பாது​காப்பு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில்​ ஈடுபட உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் அமோனியா அகற்றும் பணி
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in