அமித் ஷா ஈரோடு, சென்னையில் இன்று ‘ரோடு ஷோ’

பாஜக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: இரண்டு நாள் பயண​மாக தமிழகம் வந்​துள்ள மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ஈரோடு, சென்​னை​யில் இன்று ரோடு ஷோ மேற்​கொள்​கிறார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் களம் உச்​சக்கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. 21-ம் தேதி மாலை​யுடன் பிரச்​சா​ரம் முடிவடைகிறது. இன்​னும் 3 நாட்​களே அவகாசம் இருப்​ப​தால் அனைத்​துக் கட்​சி​யினரும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யைப் பொருத்​தவரை, பாஜக தேசி​யத் தலை​வர்​கள் தமிழகத்​தில் முகாமிட்​டு, கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கின்​றனர். நாகர்​கோ​விலில் கடந்த 15-ம் தேதி ‘ரோடு ஷோ’ நடத்​திய பிரதமர் மோடி, நேற்று கோவை கொடிசியா மைதானத்​தில் நடை​பெற்ற பிரம்​மாண்ட பொதுக் கூட்​டத்​தில் பங்​கேற்​றார்.

இந்​நிலை​யில், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று இரவு டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கோவை வந்​தார். அவி​நாசி சாலை​யில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் தங்​கிய அவர் பாஜக மற்​றும் அதி​முக உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்சி நிர்​வாகி​களு​டன் தேர்​தல் வியூ​கங்​கள் குறித்து நள்​ளிரவு வரை ஆலோ​சனை நடத்​தி​னார்.

இன்று காலை 9 மணி அளவில் கோவை விமான நிலை​யத்​தில் இருந்து ஹெலி​காப்​டர் மூலம் ஈரோடு மாவட்​டம் தாமரைப்​பாளை​யம் செல்​கிறார். அங்​கிருந்து சிவகிரி சென்​று, மொடக்​குறிச்சி தொகுதி பாஜக வேட்​பாளர் கிருத்​திகா சிவக்​கு​மார் மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து ஒரு மணி நேரம் ரோடு ஷோ மேற்​கொள்​கிறார்.

பின்​னர், கோவை திரும்பி அங்​கிருந்து தனி விமானம் மூலம் மதி​யம் 12 மணிக்கு சென்னை வரு​கிறார். சென்னை விமான நிலை​யத்​தில் அவருக்கு பாஜக தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளிக்​கின்​றனர். கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் சிறிது நேரம் ஓய்​வெடுக்​கும் அமித் ஷா, மாலை 4.15 மணிக்கு மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயிலுக்​குச் சென்று சுவாமி தரிசனம் செய்​கிறார்.

கோயில் அரு​கில் இருந்து மாலை 5 மணிக்கு தொடங்​கும் பிரம்​மாண்ட ரோடு ஷோவில் பங்​கேற்​கிறார். மயி​லாப்​பூர் பாஜக வேட்​பாளர் தமிழிசை சவுந்​தர​ராஜன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து வாக்கு சேகரிக்​கிறார். பிறகு, கிண்டி விடு​திக்​குச் சென்று பாஜக மூத்த நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்​துகிறார்​. இன்​று இரவே டெல்​லி திரும்​புகிறார்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தொகுதி மறுவரையறையை 2051 வரை தள்ளி வைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in