அண்ணாமலையாரை தரிசனம் செய்த அமித் ஷா: திருவண்ணாமலையில் உற்சாக வரவேற்பு

பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated on
1 min read

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று சுவாமி தரிசனம் செய்​தார்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரிக்கு இரண்டு நாள் பயண​மாக வருகை தந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று மாலை சென்னை விமான நிலை​யம் வந்​தடைந்​தார். பின்​னர் அங்​கிருந்து தனி ஹெலி​காப்​டர் மூல​மாக திரு​வண்​ணா​மலைக்கு மாலை 5.20 மணிக்கு வந்​தார்.

திரு​வண்​ணா​மலையில் உள்ள தனி​யார் வளாகத்தில் உள்ள தளத்​தில் ஹெலிகாப்​டர் தரை​யிரங்​கியது. அங்​கு, மாவட்ட ஆட்​சி​யர் வந்​தனா கார்க், மாவட்ட காவல்கண்​காணிப்​பாளர் ஆர்​. உதயகு​மார் ஆகியோர் மத்​திய உள்​துறை அமைச்​சருக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்​றனர். பின்​னர், அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக பலத்த பாது​காப்​புடன் காரில் அண்​ணா​மலை​யார் கோயிலுக்கு மாலை 5.30 மணிக்கு வந்தார்.

அப்​போது வரும் வழி​யில் வழி நெடு​கிலும் சாலை​யின் இரு​புற​மும் அமைக்​கப்​பட்​டிருந்த தடுப்​பு​களுக்கு பின்​னர் இருந்து பொது​மக்​களும், கட்சி தொண்​டர்​களும் உற்​சாக​மாக மலர் தூவி வரவேற்​றனர். அவருக்​கு, கோயில் நிர்​வாகம் மற்​றும் சிவாச்​சா​ரி​யார்​கள் பூரண கும்​பம் மரி​யாதை அளித்துவரவேற்​றனர். பின்​னர், அண்​ணா​மலை​யார், உண்​ணா​முலை​யம்​மன் சன்​ன​தி​யில் நடை​பெற்ற சிறப்பு பூஜை​யில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்​தார். பின்னர் கோயில் நிர்​வாகம் சார்​பில் பிர​சாதம் வழங்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்​து, மாலை 6.20 மணிக்கு புறப்​பட்ட அவர் கிரிவல பாதை​யில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்​துக்கு மாலை 6.30 மணிக்​குச் சென்​றார். அங்கு நடை​பெற்ற சிறப்பு பூஜை​யிலும் கலந்து கொண்​டார். பின்​னர், அங்​கிருந்து மாலை 6.55 மணிக்கு புறப்​பட்​டு, சாலை மார்க்​க​மாக திண்​டிவனம் வழி​யாக புதுச்​சேரிக்கு புறப்​பட்​டுச் சென்​றார்.

அண்​ணா​மலை​யார் கோயிலுக்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் வருகை தந்​ததையொட்​டி, கோயி​லில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்ய அனு​மதி மறுக்​கப்​பட்​டது. மேலும் வடக்கு மண்டல ஐஜி பிர​வின்​கு​மார் அபினவ், வேலூர் சரக டிஐஜி மகேஷ், 4 மாவட்​டங்​களைச் சேர்ந்த காவல் கண்​காணிப்​பாளர்​கள் மற்​றும் மத்​திய பாது​காப்பு படை​யினர் என ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடுபட்​டிருந்​தனர்​.

<div class="paragraphs"><p>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.</p></div>
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in