“காங்கிரஸ் ​ஆட்சி புதுச்சேரியை பின்னோக்கி தள்ளிவிட்டது” - அமித் ஷா குற்றச்சாட்டு

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு பகுதியில் நடந்த என்டிஏ பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில பாஜக தலைவர் வி.பி ராமலிங்கம் உள்ளிட்டோர். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு பகுதியில் நடந்த என்டிஏ பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில பாஜக தலைவர் வி.பி ராமலிங்கம் உள்ளிட்டோர். படம்: எம்.சாம்ராஜ்

Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்​சேரி பாஜக சார்​பில் என்​டிஏ வேட்​பாளர்​களை ஆதரித்து மண்​ணாடிப்​பட்டு தொகுதி திருக்​க​னுாரில் நேற்று மாலை பிரச்​சார கூட்​டம் நடை​பெற்​றது.

மண்​ணாடிப்​பட்டு வேட்​பாள​ரும், அமைச்​சரு​மான நமச்​சி​வா​யம் வரவேற்​றார். கூட்​டத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பேசி​ய​தாவது: புதுச்​சேரி​யில் வாக்​குப்​ப​திவுக்கு இன்​னும் 3 நாட்​களே உள்​ளன. புதுச்​சேரியை உயர்ந்த, உன்​னத​மான இடத்​துக்கு என்​டிஏ அரசு எடுத்​துச் செல்​லும் என உறுதி அளிக்​கிறேன்.

காங்​கிரஸின் நாராயண​சாமி ஆட்​சி, புதுச்​சேரி மாநிலத்தை பின்​னோக்கி தள்​ளி​விட்​டது. இதை சரிசெய்​யவே 5 ஆண்​டு​கள் ஆகி​விட்​டன. இப்​போது புதுச்​சேரி வளர்ச்​சியை நோக்​கிச் செல்ல மீண்​டும் இந்​தக் கூட்​டணி வெற்​றி​பெற வேண்​டும்.

புதுச்​சேரி​யில் கடந்​த​முறை என்​டிஏ கூட்​டணி வெற்றி பெற்​ற​போது காங்​கிரஸ் தலை​வர் கார்​கே, ‘இந்​தி​யா​வில் ஒரு சிறிய இடத்​தில் வெற்றி பெற்​றதை பெரு​மை​யாக பேசுகிறீர்​கள்’ என்று எள்ளி நகை​யாடி​னார்.

300 இடங்​களாக இருந்​தா​லும், 30 இடங்​களாக இருந்​தா​லும் புதுச்​சேரி இந்​தி​யா​வின் ஒரு அங்​கம். எங்​கள் இதயத்​தில் உள்ள மாநிலம். பாரதத்​தின் வெற்​றிக்கு புதுச்​சேரி​யின் வெற்றி மிக​வும் அவசி​யம். நமச்​சி​வா​யத்​துக்கு புதுச்​சேரி​யின் வளர்ச்​சி​யில் முக்​கிய பங்கு உள்​ளது. பிரதமர் மோடி ஆயிர​மா​யிரம் கோடியை புதுச்​சேரிக்கு வழங்​கிய​தில் நமச்​சி​வா​யத்​துக்கு முக்​கிய பங்கு உள்​ளது.

அவர் பல வேலை​வாய்ப்பு முகாம்​களை வெற்​றிகர​மாக நடத்​தி​யுள்​ளார். என்​டிஏ கூட்​ட​ணி​யில் அனைத்து கட்​சிகளும் ஒற்​றுமை​யாக தேர்​தலை சந்​திக்​கிறோம். ஆனால் இண்​டியா கூட்​ட​ணி​யில் இப்​போதே தொகு​திக்​காக, பதவிக்​காக, சண்டை போட்​டுக் கொள்​கின்​றனர். இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கட்​சிகள் கூட்​ட​ணியி​லிருந்து விலகி தனித்து போட்​டி​யிடு​கின்​றன. திமுக​வும், காங்​கிரஸும் கூட ஒன்​றாக இல்​லை. அவர்​கள் 5 தொகு​தி​களில் நேருக்கு நேர் மோதிக் கொள்​கின்​றனர். நமது கூட்​டணி கட்​சிகள் அனைத்​தும் ஒன்​றாக இருந்​து, ஒற்​றுமையை பறை​சாற்றி வரு​கின்​றன.

நாராயண​சாமி ஆட்​சி​யில் ஊழல் உச்​சத்​தில் இருந்​தது. மருத்​துவ இடஒதுக்​கீடு இடங்​களை கூவி, கூவி விற்​றனர். பட்​டியல் இனத்​தினர் இடங்​களைக்​கூட லஞ்​சத்​துக்​காக விலை பேசினர். ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு காங்​கிரஸ், திமுக கட்​சி​யினர் சென்​டாக் மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். சிஏஜி அறிக்​கை​யில் கூறிய இந்த ஊழல் தொகை​யில் புதுச்​சேரி​யின் 3 ஆண்டு பட்​ஜெட் போட்​டிருக்​கலாம்.

காங்​கிரஸ், திமுக ஆட்​சி​யில் வேலை​யில்லா திண்​டாட்​டம் 47 சதவீத​மாக உயர்ந்​திருந்​தது. ஆனால் நமது ஆட்​சி​யில் வேலை​யில்லா திண்​டாட்​டத்தை ஒழிக்க எடுத்த முயற்​சி​யால் 4.3 சதவீத​மாக குறைந்​தது. வளை​குடா போரால் பெட்​ரோல், டீசல் விலை உயர்​கிறது என ராகுல் கூறி​யுள்​ளார். ராகுல் கனவுல​கில் மிதக்​கிறார். அவர் கூறியது உண்​மை​தான். பெட்​ரோல் ரூ.458, டீசல் ரூ.520 ஆக உயர்ந்​துள்​ளது. அது இந்​தி​யா​வில் இல்​லை, நீங்​கள் நேசிக்​கும் பாகிஸ்​தானில்​தான் இந்த விலை விற்​கிறது.

புதுச்​சேரியை தகவல் தொழில்​நுட்ப மாநில​மாக உயர்த்த அரு​மை​யான திட்​டம் தீட்​டப்​பட்டு வரு​கிறது. புதுச்​சேரி​யில் ஆண்​டுக்கு 3 லட்​சம் லேப்​டாப் தயாரிக்​கப்​பட்​டு, வெளி​நாடு அனுப்​பப்​படு​கிறது. இது​போல பல தொழிற்​சாலைகள், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களை கொண்​டு​வந்து புதுச்​சேரி முன்​னேற்​றத்​துக்கு வழி செய்து வரு​கிறோம். லிங்​காரெட்​டி​பாளை​யம், அரியூர் சர்க்​கரை ஆலையை தனி​யார் கூட்​டமைப்பு மூலம் புனரமைத்து இயக்க உறு​தி​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்.

ஒவ்​வொரு துறை​யாக வளர்ச்சி திட்​டங்​களை கொடுத்து புதுச்​சேரியை முன்​னேறிய மாநில​மாக ஆக்க வேண்​டும் என நாங்​கள் திட்​ட​மிட்டு வரு​கிறோம். ஆனால் ராகுல் பாகிஸ்​தான் விலை உயர்வை கூறி மக்​களை பயமுறுத்​துகிறார். புதுச்​சேரி பெரும் வளர்ச்​சியை நோக்கி செல்ல, 5 ஆண்டு ஆட்​சி​யின் வெற்றி தொடர என்​டிஏக்கு ஆதரவு அளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். இக் கூட்​டத்​தில் மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா, பாஜக மாநிலத் தலை​வர் வி.பி.​ராமலிங்​கம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி மண்ணாடிப்பட்டு பகுதியில் நடந்த என்டிஏ பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில பாஜக தலைவர் வி.பி ராமலிங்கம் உள்ளிட்டோர். படம்: எம்.சாம்ராஜ்</p></div>
மனு தாக்கலுக்கான அவகாசம் முடிவடைந்தது: தமிழகம் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in