புதிய வரலாறு படைத்திருக்கிறார் முதல்வர்: மு.க.அழகிரி மகள் கயல்விழி கருத்து

புதிய வரலாறு படைத்திருக்கிறார் முதல்வர்: மு.க.அழகிரி மகள் கயல்விழி கருத்து
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்​வ​ராக ஜோசப் விஜய் பதவி ஏற்​றுக்​கொண்​ட விழா​வில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் மு.க.அழகிரி​யின் மகள் கயல்விழி பங்​கேற்றார்.

அப்போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஒரு புதிய வரலாற்றை முதல்​வர் ஜோசப் விஜய் படைத்​திருக்​கிறார். மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. மேன்மேலும் அவர் மக்​களுக்கு நல்​லது செய்ய வேண்​டும் என மிக ஆவலுடன் எதிர்​பார்த்து காத்​திருக்​கிறோம்.

ஓர் இளைஞர் ஆட்​சிக்கு வந்​திருக்​கிறார். அவர் மக்​களுக்கு நல்​லது செய்​வார் என 100 சதவீதம் நம்​பிக்கை இருக்​கிறது. அவர் மிகவும் கஷ்டப்​பட்டு போராடி வெற்றி பெற்​றிருக்​கிறார்.

அவரது போராட்​டத்​துக்கு நிச்​ச​யம் நல்​லது நடக்​கும். இதற்​காக, தமிழக மக்​களுக்​கும், அவரது தோழமை கட்​சிகளுக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

புதிய வரலாறு படைத்திருக்கிறார் முதல்வர்: மு.க.அழகிரி மகள் கயல்விழி கருத்து
விஜய்யின் அறிவிப்புகளுக்கு பாமக, கம்யூனிஸ்ட் வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in