அதிமுகவில் 23 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டி

அதிமுகவில் 23 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டி
Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி அதி​முக சார்​பில் போட்​டி​யிடும் 23 பேரின் முதல் கட்ட பட்​டியலைப் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதில் முன்​னாள் அமைச்​சர்​கள் 21 பேருக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. எடப்​பாடி தொகு​தி​யில் பழனி​சாமி மீண்​டும் போட்​டி​யிடு​கிறார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், வேட்பு மனு தாக்​கலுக்கு இன்​னும் 4 நாட்​கள் மட்​டுமே இருப்​ப​தால், திமுக, அதி​முக கூட்​ட​ணி​கள் பரபரப்​பாக இயங்கி வரு​கின்​றன. அதி​முக​வில் ஒவ்​வொரு நாளும் அதிரடி அறி​விப்​பு​கள் வெளி​யாகி வரு​கின்​றன. கடந்த 23-ம் தேதி கூட்​டணி கட்​சிகளுக்​கான தொகுதி பங்​கீடு அறிவிக்​கப்​பட்​டது. 24-ம் தேதி 297 வாக்​குறு​தி​கள் இடம்​பெற்ற தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​பட்​டது.

இந்​நிலை​யில், அதி​முக​வின் 23 வேட்​பாளர்​கள், அவர்​கள் போட்​டி​யிடும் தொகு​தி​கள் அடங்​கிய பட்​டியலைக் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதன்​படி, அதி​முக சார்​பில் போட்​டி​யிடும் தொகு​தி​கள் மற்​றும் வேட்​பாளர்​கள் விவரம்:

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி எடப்​பாடி தொகு​தி​யில் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். துணைப் பொதுச் செய​லா​ளர்​கள் கே.பி.​முனு​சாமி (வேப்​பனஹள்​ளி), நத்​தம் விஸ்​வ​நாதன் (நத்​தம்), பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன் (திண்​டுக்​கல்), தலைமை நிலை​யச் செய​லா​ளர் எஸ்​.பி.வேலுமணி (தொண்​டா​முத்​தூர்) தொகு​தி​யில் போட்​டி​யிடு​கின்​றனர். முன்​னாள் அமைச்​சர்​கள் பி.தங்​கமணி (கு​மார​பாளை​யம்), டி.ஜெயக்​கு​மார் (ராயபுரம்), சி.​வி.சண்​முகம் (மயிலம்), செல்​லூர் ராஜூ (மதுரை மேற்​கு), கே.பி.அன்​பழகன் (பாலக்​கோடு), ஆர்​.​காம​ராஜ் (நன்​னிலம்), ஓ.எஸ்​.மணி​யன் (வே​தா​ரண்​யம்), சி.​விஜய​பாஸ்​கர் (வி​ராலிமலை), கடம்​பூர் ராஜூ (கோ​வில்​பட்​டி), ஆர்​.பி.உதயகு​மார் (திரு​மங்​கலம்), கே.டி.​ராஜேந்​திர பாலாஜி (சிவ​காசி), பா.பெஞ்​சமின் (மதுர​வாயல்), அக்ரி கிருஷ்ண​மூர்த்தி (கலச​பாக்​கம்), கே.சி.கருப்​பணன் (பவானி), சி.வீரமணி (ஜோலார்​பேட்​டை), எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் (கரூர்), அமைப்பு செய​லா​ளர் வி.​வி.​ராஜன் செல்​லப்பா (திருப்​பரங்​குன்​றம்), அரியலூர் மாவட்ட செய​லா​ளர் தாமரை எஸ்​.​ராஜேந்​திரன் (அரியலூர்) தொகு​தி​யில் போட்​டி​யிடு​கின்​றனர். இதில், 21 பேர் முன்​னாள் அமைச்​சர்​கள், 16 பேர் தற்​போது எம்​எல்​ஏ.க்​களாக உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

வேட்​பாளர்​கள் பட்​டியலை வெளி​யிட்ட பிறகு, செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறிய​தாவது: கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு அறிவிக்​கப்​பட்ட தொகு​தி​கள் தவிர, எஞ்​சிய 169 தொகு​தி​களில் அதி​முக போட்​டி​யிடும். 234 தொகு​தி​களி​லும் எங்​கள் கூட்​டணி வெற்றி பெறும். ஜான் பாண்​டியன், பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் விரும்​பும் சின்​னத்​தில் போட்​டி​யிடலாம். திமுக மாதிரி நாங்​கள் கண்​டிஷன் போட மாட்​டோம். எங்​கள் கூட்​ட​ணி​யில் உள்​ளவர்​கள் ஜனநாயக முறைப்​படி செயல்​படு​பவர்​கள்.

எங்​கள் கூட்​ட​ணி​யில் பிர​தான கட்சி அதி​முக. எங்​கள் கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் கட்​சிகள் எல்​லாமே வாக்கு வங்கி உள்ள கட்​சிகள்.

எல்​லோரும் ஒன்​றாக சேர்ந்​துள்​ளோம். அதனால் திமுக எதிர்ப்பு ஓட்​டு​கள் எங்​கள் கூட்​ட​ணிக்​குத்​தான் கிடைக்​கும். ஏற்​கெனவே இந்த கூட்​ட​ணி​யுடன் தேர்​தலை சந்​தித்து இருக்​கிறோம். திமுகவை அகற்ற வேண்​டும் என்று மக்​கள் முடிவுக்கு வந்​து​விட்​டார்​கள். மக்​கள் கொதித்​துப் போய் இருக்​கிறார்​கள். அதி​முக​வும், கூட்​ட​ணிக் கட்​சிகளும் கடந்த 5 ஆண்​டு​களாக எதிர்க்​கட்​சி​யாக இருந்​து, மக்​களின் பிரச்​சினை​களை முன்​வைத்​து, மக்​களுக்​காக வாதாடி இருக்​கிறது. மக்​களுக்​காக யார் குரல் கொடுக்​கிறார்​களோ அவர்​களுக்​குத்​தான், எதிர்ப்பு வாக்​கு​கள் கிடைக்​கும். வீட்​டில் இருப்​பவர்​களுக்​குக் கிடைக்​காது.

இன்று கரூர் முழு​வதும் கொட்​டகை போட்டு வைத்​திருக்​கிறார்​கள். ஆடு, மாடு​களை அடைப்​பது போன்று மக்​களை அடைக்​கும் கட்சி திமுக. பணத்தை வைத்து மக்​களை விலைக்கு வாங்​கலாம் என நினைக்​கிறார்​கள். அது ஒரு போதும் நடக்​காது. 5 ஆண்டு கால ஆட்​சியை மக்​கள் பார்த்​து​ விட்​டார்​கள். எனவே, மக்​கள் இந்த ஆட்​சியை தூக்​கியெறி​யத் தயா​ராகி​விட்​டார்​கள். எத்​தனை கொட்​டகை போட்​டாலும், மக்​கள் மனதை மாற்ற முடி​யாது. உண்​மை​யில் அங்கு ஆடு, மாடு​களை போன்று மக்​களை திமுக​வினர் அடைக்​கிறார்​கள். இந்த தேர்​தலில் மக்​கள் திமுக கூட்​ட​ணிக்​குத் தகுந்த பதிலடி கொடுப்​பார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.​

நிகழ்ச்​சி​யில் அதி​முக துணைப் பொதுச் செய​லா​ளர்​கள் கே.பி.​முனு​சாமி, நத்​தம் விஸ்​வ​நாதன், அவைத் தலை​வர் தமிழ் மகன் உசேன், பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் தலை​வர்​கள் பொன்​.​ரா​தாகிருஷ்ணன், தமிழிசை சவுந்​தர​ராஜன், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், தமாகா தலை​வர்​ ஜி.கே.​வாசன்​, இந்​தி​ய ஜனநாயக கட்​சி நிறு​வனர்​ பாரிவேந்​தர்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

அதிமுகவில் 23 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டி
4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்​சனா தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in