மகளிர் அதிகாரம், உரிமைக்கு எதிராக திமுக - காங். கூட்டணி செய்த துரோகம்: அதிமுக, பாஜக, பாமக, தமாகா குற்றச்சாட்டு

மகளிர் அதிகாரம், உரிமைக்கு எதிராக திமுக - காங். கூட்டணி செய்த துரோகம்:  அதிமுக, பாஜக, பாமக, தமாகா குற்றச்சாட்டு
Updated on
2 min read

சென்னை: பெண்​களுக்​கான 33 சதவீத இடஒதுக்​கீடு மசோதா தோற்​கடிக்கப்​பட்​டிருப்​பது, மகளிர் அதி​காரம் மற்​றும் உரிமைக்கு எதி​ராக திமுக - காங்​கிரஸ் கூட்​டணி செய்த துரோகம் என அதி​முக, பாஜக, பாமக, தமாகா கட்​சித் தலை​வர்​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன்: திமுக மற்​றும் காங்​கிரஸ் தலை​மையி​லான எதிர்க்​கட்சிகளின் கண்​மூடித்​தன​மான வெறுப்​பு, மாநிலத்​துக்கு கிடைக்​கவேண்​டிய நியாய​மான தொகு​திப்பங்​கீட்​டை​யும் பெண்களுக்கு கிடைக்​கவேண்​டிய இட ஒதுக்கீட்​டை​யும் பாதித்​துள்​ளது. பிரதமர் மோடி உறு​தி​யளித்த, இருதரப்​புக்​கும் பலனளிக்​கும் திட்​டத்​தில் பங்​கெடுக்க மறுத்​து, தமிழகத்​துக்கு அநீதி இழைத்​து​விட்​டார்​கள்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தின் அரசி​யல் வலிமையை அதி​கரிப்​ப​தற்​கும், 20 கூடு​தல் நாடாளு​மன்ற இடங்​களை பெறு​வதற்​கு​மான வாய்ப்பை தமிழகம் இழந்​து​விட்​டது. 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின்​படி தொகுதி மறு​வரையறை செய்​யப்​பட்​டிருந்​தால், தமிழகம் 9 நாடாளு​மன்ற இடங்​களை இழந்​திருக்​கும்.

இந்த மசோ​தாவுக்கு அவர் காட்​டிய எதிர்ப்​பின் காரண​மாக, தொகுதி மறு​வரையறை 2026-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின் அடிப்​படை​யில் அமை​யும். இதனால் நாம் இன்​னும் கூடு​தலான நாடாளு​மன்ற இடங்​களை இழக்க நேரிடும். இதன்​மூலம் தமிழகத்​துக்கு மட்​டுமல்​லாமல், இந்​தியா முழு​வதும் உள்ள பெண்​களுக்​கும் மிகப்​பெரிய துரோகத்தை முதல்​வர் செய்​துள்​ளார்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: அரசி​யல் காழ்ப்​புணர்ச்சி காரண​மாக 33 சதவீத இடஒதுக்​கீடு மசோ​தாவை அமல்​படுத்​த​வி​டா​மல் அராஜகம் செய்​து, மகளிர் முன்​னேற்​றத்தை தடுத்து ஒட்​டுமொத்த இந்​திய பெண்​களை திமுக - காங்​கிரஸ் கூட்​டணி வஞ்​சித்​திருக்​கிறது.

இந்த அகங்​கார செயல், மிகப்​பெரும் வரலாற்​றுப் பிழை மட்​டுமல்ல, பெண்​ணினத்​துக்கு செய்த பச்சை துரோக​மாகும். நம் பெண்​கள் இதை என்​றும் மன்​னிக்க மாட்​டார்​கள். பெண்​களின் அதி​காரத்தை நிலை​நாட்​டும் விதமாக, மகளிர் இட ஒதுக்​கீடு மசோ​தாவை கூடிய விரை​வில் நிறைவேற்றி பெண்​கள் முன்​னேற்​றத்தை பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு உறுதி செய்​யும்.

பாமக தலை​வர் அன்​புமணி: மக்​களவை​யில் தமிழகத்​தின் பிர​தி​நி​தித்​து​வம் 59 ஆக உயரும் என்று பிரதமரும், உள்​துறை அமைச்​சரும் உறு​தி​யளித்த பிறகும், எதிர்க்​கட்​சிகளை ஒன்​று​ திரட்​டி, மகளிர் இடஒதுக்​கீட்டு சட்​டத்தை மு.க.ஸ்​டா​லின் வீழ்த்​தி​யிருக்​கிறார். மகளிருக்​கான மசோ​தாவை வீழ்த்​தி​யது மட்​டுமின்றி, அதை பட்​டாசு வெடித்​தும் கொண்​டாடி​யிருக்​கிறார். மு.க.ஸ்​டா​லினை மகளிர் சமு​தா​யம் ஒரு​போதும் மன்​னிக்​காது.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்​டால் தென் மாநிலங்​களில் எந்​த​வித பாதிப்​பும் ஏற்​ப​டாது. இதனை எதிர்க்​கட்​சிகள் உணர்ந்​து​கொள்​ளாதது மிக​வும் துர​திருஷ்ட​வச​மானது. தொகுதி மறு​வரையறை என்​பது கிராமங்​களும், நகரம் போல் வரு​வதற்​கானஒரு வாய்ப்​பு. அதன் வளர்ச்​சி​யின் பிர​தி​நி​தி​யாக பெண்​கள் இருப்​பது நாடு வல்​லரசு ஆவதற்கு பொருத்​த​மானது. மகளிர் இட ஒதுக்​கீட்டை எதிர்க்​கும் எதிர்​க்கட்​சிகளை ஒரு​போதும் தமிழக மக்​கள் மன்​னிக்க மாட்​டார்​கள்.

தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத்: மத்​திய அரசால் தமிழகத்​துக்கு 59 எம்​.பி.க்​கள் கிடைக்க இருந்த நிலை​யில் முதல்​வர் ஸ்டா​லினின் தவறான முடி​வால், 6 எம்​.பி தொகு​தி​கள் பறி​போய் 26 எம்​.பி தொகு​தி​கள் மட்​டுமே கிடைக்​கும் நிலை ஏற்​படும். இது தமிழகத்​துக்​கும் தமிழக பெண்​களுக்​கும் தி​முக மற்றும் காங்கிரஸ் கூட்டணி செய்​யும் மிகப்​பெரிய துரோக​மாகும்​. இவ்​வாறு அவர்​கள்​ வெளி​யிட்ட அறிக்​கை​களில் தெரிவித்​துள்​ளனர்​.

மகளிர் அதிகாரம், உரிமைக்கு எதிராக திமுக - காங். கூட்டணி செய்த துரோகம்:  அதிமுக, பாஜக, பாமக, தமாகா குற்றச்சாட்டு
மகளிர் மசோதாவை தோற்கடித்து நல்ல முயற்சியை கருவிலேயே அழித்தனர்: பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in