மகளிர் மசோதாவை தோற்கடித்து நல்ல முயற்சியை கருவிலேயே அழித்தனர்: பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு

மகளிர் மசோதாவை தோற்கடித்து நல்ல முயற்சியை கருவிலேயே அழித்தனர்: பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுடெல்லி: மக்​களவை​யில் மகளிர் இடஒதுக்​கீட்​டுக்​கான மசோ​தாவை தோற்​கடித்​து காங்​கிரஸ், திமுக, திரிண​மூல், சமாஜ்வாதி ஆகிய கட்​சிகள்​ ஒரு நல்ல முயற்சியை கருவிலேயே அழித்துவிட்டன என்று பிரதமர் மோடி குற்​றம் சாட்டி உள்​ளார்.

மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​துதற்​காக அரசி​யல் சாசனத் திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோ​தாக்​கள் கடந்த 16-ம் தேதி மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இதில் அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026 மீது மக்​களவை​யில் நேற்று முன்​தினம் வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்​காத​தால் இந்த மசோதா தோல்வி அடைந்​தது. இதைத் தொடர்ந்து, மற்ற 2 மசோ​தாக்​கள் மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை.

மன்​னிப்பு கோரு​கிறேன்: இந்நிலையில், மகளிர் இடஒதுக்​கீடு தொடர்​பாக பிரதமர் மோடி நேற்​று இரவு 8.30 மணிக்கு தொலைக்​காட்சி வாயி​லாக நாட்டு மக்​களிடம் உரை​யாற்​றி​னார். அவர் கூறிய​தாவது: நமது நாட்​டின் மகள்​கள், சகோ​தரி​களிடம் பேச வந்​துள்​ளேன். மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்படுத்துவதற்​கான மசோ​தாவை நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்ற முடி​யாமல் போய்​விட்​டது.

அதற்​காக அனைத்து பெண்​களிட​மும் மன்​னிப்பு கோரு​கிறேன். காங்​கிரஸ், திமுக, திரிண​மூல் காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்டகட்​சிகளின் சுயநல அரசி​யல் காரண​மாக நமது பெண்​கள் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். மசோதா தோல்வி அடைந்​த​போது நான் சோகத்​தில் ஆழ்ந்​தேன். ஆனால், அந்த கட்சிகளின் எம்.​பி.க்​கள் மகிழ்ச்​சி​யில் திளைத்​தனர்.

மேஜைகளை தட்டி ஆர்ப்​பரித்​தனர். அவர்​களது நடவடிக்​கைகள், பெண்​களின் சுயமரி​யாதை மீதான நேரடிதாக்​குதல். இதை இந்​திய பெண்​கள் மறக்க மாட்​டார்​கள். இது அவர்களிடம் நீங்காத வடுவைஏற்படுத்தியுள்ளது. இந்த கட்சியினர் தங்களது தொகுதிக்கு செல்லும்போது, அவர்களது நாடாளுமன்ற செயல்பாடுதான் பெண்களின் மனதில் நிழலாடும்.

மசோ​தாவை தோற்​கடித்​தவர்​கள் பெண்​களின் சக்​தியை சாதா​ரண​மாக எடை போட்​டு​விட்​டனர். இதன்மூலம் எதிர்க்​கட்​சிகள் மிகப்​பெரிய பாவத்தை இழைத்​துள்​ளனர். அதற்​கான தண்​டனையை பெண்​கள் வழங்​கு​வார்​கள். மக்​களின் தண்​டனை​யில் இருந்து எதிர்க்​கட்​சிகள் தப்​பிக்க முடி​யாது. வரும் 2029-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலில் பெண்​களுக்​கான இடஒதுக்​கீட்டை வழங்க மத்​திய அரசு விரும்​பியது. வடக்​கு,தெற்​கு, கிழக்​கு, மேற்கு என்ற பாகு​பாடு இல்​லாமல் அனைத்து பிராந்​தி​யங்​களி​லும் ஆட்​சி, அதி​காரத்​தில் பெண்​களின் பங்​களிப்பை அதி​கரிக்​கச் செய்ய மசோதா கொண்டு வரப்​பட்​டது.

மத்​திய அரசின் உன்​னத​மான நோக்​கத்தை காங்​கிரஸும், அதன் கூட்​டணி கட்​சிகளும் சீர்​குலைத்​து​விட்​டன. பெண்​களின் உரிமை​களை பறித்​து​விட்​டன.

மகளிர் இடஒதுக்​கீட்டை காங்​கிரஸ் வெறுக்​கிறது. இதன்​காரண​மாக இதுதொடர்​பான மசோ​தாக்​களை அந்த கட்சி தொடர்ச்​சி​யாக தடுத்து வரு​கிறது. இப்​போதும் காங்​கிரஸும் அதன் கூட்​டணி கட்சிகளானதிமுக, திரிண​மூல், சமாஜ்​வாதிஉள்​ளிட்​டவையும் மசோதாவை தோற்​கடித்து விட்​டன. இதன்மூலம் ஒரு நல்ல முயற்சியை கருவிலேயே அழித்துவிட்டனர்.

மக்​களிடம் தவறான தகவல்​களை காங்​கிரஸ் தலை​வர்​கள் பரப்பி வரு​கின்​றனர். ஆனால் அவர்​களது முகமூடி தற்​போது கிழிந்​து​விட்​டது. அவர்​களின் உண்​மை​யான முகம் மக்களுக்கு அம்​பல​மாகி உள்​ளது. பல ஆண்டு தவறை திருத்​திக் கொள்​ளும்​படி காங்​கிரஸிடம் மன்​றாடினேன். ஆனால் அவர்​கள் தவறை திருத்​திக் கொள்ள​வில்​லை.

தவறுக்கு மேல் தவறு செய்து வரு​கின்​றனர். பல்வேறு மாநிலங்​களில் காங்​கிரஸ் மறைந்​து​விட்​டது. எனினும் சில பிராந்​திய கட்​சிகளின் ஆதர​வுடன் ஒட்​டுண்ணி போல காங்​கிரஸ் பிழைப்பு நடத்து​கிறது. காங்​கிரஸும் அதன் கூட்​டணி கட்​சிகளும் வாரிசு அரசி​யலை பின்​பற்றி வரு​கின்​றன. பெண்களுக்கு இடஒதுக்​கீடு வழங்​கி​னால் வாரிசு அரசி​யல் பாதிக்​கப்​படும்.

தங்​களின் கட்​சிகள் பாதிக்​கப்​படும் என்ற அச்​சம் காரண​மாக மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கத்​துக்​கான மசோ​தாவை தோற்​கடித்து உள்​ளன. அவர்​களின் தீய எண்​ணத்தை நாட்டு மக்​கள் புரிந்து கொண்​டுள்​ளனர். நாட்​டுக்கு சேவை​யாற்ற இந்​தியப் பெண்​கள் தயா​ராக உள்​ளனர். ஆனால் வாரிசு அரசி​யல் தலைவர்​கள், பெண்களின் வளர்ச்​சியை விரும்​ப​வில்​லை. மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டால் பெண்​களுக்​கான ஒதுக்​கீடு அதி​கரிக்​கும் என்று அஞ்​சுகின்​றனர். காங்​கிரஸ் கூட்டணி கட்​சிகள் செய்த மாபாதகத்தை பெண்​கள் மன்​னிக்க மாட்​டார்கள்.

தொகுதி மறு​வரையறை தொடர்​பாக நாட்​டில் பிரி​வினையைத் தூண்ட காங்​கிரஸ் முயற்சி செய்​கிறது. சில மாநிலங்​களில் மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறை​யும் என்று காங்​கிரஸ், திமுக, திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிகள் மக்​களிடம் தவறான தகவல்​களை பரப்பி வரு​கின்​றன. மக்​களவை​யில் மசோதா நிறைவேற்​றப்​பட்டு இருந்​தால் மேற்​கு​வங்​கம், உத்தர பிரதேசம், கேரளா, தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களில் தொகு​தி​களின் எண்​ணிக்கை அதி​கரித்திருக்​கும். தமிழகத்​தில் மக்​களவை, சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ எண்​ணிக்கை அதி​கரித்திருக்​கும். நல்ல வாய்ப்பை திமுக தட்​டிக் கழித்​து​விட்​டது.

பெண்​கள் பாடம் கற்​பிப்​பார்​கள்: புதிய சீர்​திருத்​தங்​களை அமல்செய்​யும்​போது எதிர்ப்பு தெரி​விப்​பது காங்​கிரஸின் வழக்​க​மாக இருந்து வரு​கிறது. அந்த கட்​சி​யின் எதிர்​மறை செயல்​பாடு​களால் நாட்​டின் வளர்ச்சி பாதிக்​கப்​படு​கிறது. மசோதா நிறைவேறினால்,அதற்கான நற்பெயரை எதிர்க்கட்​சிகளுக்கு வழங்​கு​கிறேன்என நாடாளு​மன்​றத்​தில் பகிரங்​கமாக அறி​வித்​தேன். ஆனால் மகளிர் முன்​னேற்​றத்​தில் எதிர்க்கட்​சிகளுக்கு அக்கறை இல்லை. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாவை தோற்கடித்த காங்கிரஸுக்கு பெண்​கள் பாடம் கற்​பிப்​பார்கள். இவ்​வாறு பிரதமர்​ பேசி​னார்​.

தடைகளைத் தகர்ப்போம் என உறுதி: மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் 66 சதவீத வாக்குகள் தேவைப்பட்டன. அந்த வாக்குகளைப் பெற முடியவில்லை.

ஆனால், நாட்டின் 100 சதவீத பெண்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளோம். மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிவோம்.

நாடாளுமன்றத்துக்கு பெண்கள் வருவதை எதிர்க்கட்சிகளால் தடுக்கமுடியாது. மசோதாவுக்கு எங்களால் போதிய வாக்குகளைப் பெற முடியவில்லை. ஆனால், சரியான நேரத்துக்கு காத்திருக்கிறோம். காலம் கனியும்போது இந்தியப் பெண்களின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.

மகளிர் மசோதாவை தோற்கடித்து நல்ல முயற்சியை கருவிலேயே அழித்தனர்: பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு
மகளிர் மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: அண்ணாமலை வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in