ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கூடுதல் ஊழியர்கள் நியமனம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கூடுதல் ஊழியர்கள் நியமனம்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் வீடு​கள் மற்​றும் வணிக நிறு​வனங்​களில் புதிய ஸ்மார்ட் மீட்​டர்​களைப் பொருத்​தும் பணி​களை மின்​வாரியம் தீவிரப்படுத்தியுள்​ளது. இதன்​படி, தமிழகத்​தில் உள்ள 45 மின் பகிர்​மான வட்​டங்​களி​லும் 8 பணி​யாளர்​கள் வீதம் வயர்​மேன் கிரேடு-2 அல்​லது எலக்ட்​ரிஷியன் கிரேடு-2 ஆகிய பணியிடங்களில் கூடு​தல் ஊழியர்​கள் தற்​காலிக​மாக நியமிக்​கப்பட உள்ளனர்.

ஒப்​பந்த அடிப்​படை​யில் அவுட்​சோர்​சிங் முறை​யில் நியமிக்கப்படும் இவர்​களின் பணிக்​காலம் 60 நாட்​களாகும். நாளொன்​றுக்கு ரூ.965 ஊதியம் வழங்​கப்​படும். இதற்​கான டெண்டர் கோரும் பணி​களை மேற்​கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்​கள் பழைய மீட்​டர்​களை அகற்​றி புதிய ஸ்மார்ட் மீட்​டர்களைப் பொருத்​தும் பணிகளில் ஈடுபடுத்தப்படு​வர். தடையற்ற மின் விநி​யோகத்தை உறுதி செய்யவும் இவர்​கள் நியமிக்​கப்​படு​வ​தாக அதி​காரி​கள் தெரிவித்துள்​ளனர்​.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கூடுதல் ஊழியர்கள் நியமனம்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு ‘டெட்’ தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in