டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தால் நடவடிக்கை

தேர்தல் நடத்தை விதிகளால் கண்காணிப்பு தீவிரம்
டாஸ்மாக் | கோப்புப் படம்

டாஸ்மாக் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தேர்​தல் நடத்தை விதி​கள் அமலாகி​யுள்ள நிலை​யில், டாஸ்​மாக் கடைகளில் கடந்த ஆண்டை விட 30 சதவீதத்​துக்கு மேல் மது விற்​பனை அதி​கரித்​தால் நடவடிக்கை எடுக்​கப்​படும் என அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் தற்​போது 4,800 டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் நகர்ப்​புறக் கடைகளில் அதி​கள​விலும், கிராமப்​புறங்​களில் குறைந்த அளவிலும் மது விற்​பனை நடை​பெறும். இந்​நிலை​யில் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்ள சூழலில் கட்சி கூட்​டங்​கள், பிரச்​சா​ரக் கூட்​டங்​கள் நடை​பெறும் இடங்​களில் வழக்​கத்தை விட கூடு​தலாகவே விற்​பனை நடை​பெறு​வது வழக்​கம். மேலும் வாக்​கு​களுக்​காக மது விநி​யோகம் செய்​யப்​படலாம் எனவும் சிலர் தெரிவிக்​கின்​றனர்.

அதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் மது விற்​பனை, கடைகளில் மது​பானங்​களின் இருப்பு ஆகிய​வற்றை டாஸ்​மாக் நிர்​வாகம் தீவிர​மாக கண்​காணித்து வரு​கிறது. இதுகுறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தவுடன் விற்​பனை மற்​றும் கையிருப்பு குறித்து தேர்​தல் ஆணை​யத்​துக்கு அறிக்கை சமர்​பிக்​கப்​படும். விதி​களின்​படி, கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது கடைகளில் 30 சதவீதம் கூடு​தல் விற்​பனை நடந்​தால் அது அதிக விற்​பனை​யாகக் கருதப்​பட்​டு, விசா​ரணை நடத்​தப்​படும்.

கடைகளில் இருப்பு: மேலும் கடைகளில் மது​பானங்​களின் இருப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீதத்​துக்கு மேல் இருக்​கக்​கூ​டாது. தற்​போது அனைத்து கடைகளும் கணினிமய​மாக்​கப் பட்​டுள்​ள​தால் விற்​பனை மற்​றும் இருப்பு குறித்து உடனடி​யாக அறிய​முடி​யும். மொத்​த​மாக விற்​பனை செய்​யக்​கூ​டாது என அனைத்து மேற்​பார்​வை​யாளர்​களுக்​கும் அறி​வுறுத்​தி​யுள்​ளோம்.

மேலும் திடீரென விற்​பனை அதி​கரிக்​கும் கடைகளை​யும் தீவிர​மாக கண்​காணிக்​கிறோம். சிறப்பு கண்​காணிப்பு குழு அமைக்​கப்​பட்டு முறை​கேடு​கள் நடை​பெறாமல் தடுக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

<div class="paragraphs"><p>டாஸ்மாக் | கோப்புப் படம்</p></div>
“ராகுல் காந்தி பாஜகவின் பி-டீம்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in