கடந்த ஆட்சியில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்: அமைச்சர் விக்னேஷ் தகவல்

கடந்த ஆட்சியில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்: அமைச்சர் விக்னேஷ் தகவல்
Updated on
1 min read

சென்னை: கடந்த ஆட்​சி​யில் கூடு​தல் விலைக்கு மது விற்ற டாஸ்​மாக் பணி​யாளர்​கள் மீதான நடவடிக்கை திரும்​பப் பெறப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​துள்​ளார்.

எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் தலை​மையகத்​தில் அமைச்​சர் விக்​னேஷ் தலை​மை​யில் அனைத்து மாவட்ட மேலா​ளர்​களு​ட​னான கலந்​தாய்வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

பின்​னர் செய்​தி​யாளார்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: பொது​மக்​களுக்கு இடையூறாக உள்ள கடைகளை இடமாற்​றம் செய்ய கூறி​யுள்​ளோம். இடமாற்​றம் செய்​யப்​படும் கடைகள் 500 சதுர அடிக்கு மேல் இருக்​கும் வகை​யிலும், ஒரு​புறம் பில்​லிங், ஒரு புறம் மது வாங்கி செல்​லும் வித​மாக திட்​ட​மிட்​டுள்​ளோம். பார்​கள் சில தனி​நபர்​களின் கட்​டுப்​பாட்​டில் இருப்​ப​தால் அவர்​கள் டாஸ்​மாக் கடைகளை கட்​டுப்​படுத்​துகின்​றனர்.

இதன்​காரண​மாக டாஸ்​மாக் கடைகளுக்​கும் பார்​களுக்​கும் 100 மீட்​டர் இடைவெளி இருக்க வேண்​டும் என்​பதை கொண்டு வந்​தோம். கடந்த ஆட்​சி​யாளர்​கள் சொல்​லித் தான் கடை பணி​யாளர்​கள் விதி​மீறலில் ஈடுப்​பட்​டனர்.

அதனால் கடந்த காலங்​களில் கூடு​தல் விலைக்கு மது விற்​பனை செய்​ததற்​காக இடைநீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்​கள் மீண்​டும் பணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். தற்​போது செப்​.1-ம் தேதி​யில் இருந்து விதி​மீறலில் ஈடு​படு​வோர் மீது தான் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

கூடு​தல் விலைக்கு மது விற்​பனை செய்​யப்​படு​வதற்கு கடை பணி​யாளர்​கள் மட்​டும் காரண​மாக இருக்க முடி​யாது. அந்த மாவட்ட மேலா​ள​ரும் காரண​மாக இருக்​கலாம் என்ற அடிப்​படை​யிலும் அடுத்​தக்​கட்ட நடவடிக்கை மேற்​கொள்​ளவுள்​ளோம். தவறு செய்​தவர்​கள் யாரை​யும் காப்​பற்ற வேண்​டும் என்ற நோக்​கம் எங்​களுக்கு இல்​லை.

என்​னுடைய பெயரை பயன்​படுத்​தி​யும் சில இடங்​களில் வசூல் செய்​த​தாக அறிந்​தேன். 2 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. கட்சி பாகு​பாடின்றி யார் தவறு செய்​தா​லும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

ஊழியர்​கள் மேல் மட்​டும் அல்ல, செப்​.1-ம் தேதிக்கு பின் எந்த அதி​காரி​கள் மீது புகார் வந்​தா​லும் நடவடிக்கை எடுக்​கப்​படும். தவெக அரசு பொறுப்​பேற்​றது முதல் மாவட்ட மற்​றும் மண்டல மேலா​ளர்​கள் பலர் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

அனைத்து மது​பான உற்​பத்​தி​யாளர்​களை நாங்​கள் சமமாக பார்க்​கிறோம். கடந்த ஆட்​சி​யாளர்​கள் போல் ஒரு சிலரிடம் வாங்​கலாம். மற்​றவர்​களிடம் வாங்​கக்​கூ​டாது என்ற எண்​ணம் எங்​களுக்கு இல்​லை. மது கொள்​முதல் கொள்​கைகளை மாற்​றியமைப்​பது குறித்து இனி வரும் காலங்​களில் முடி​வெடுக்​கப்​படும்.

கரூர் கேங் யார் என்று முதல்​வரே சொல்லி இருக்​கிறார். அமலாக்​கத்​துறை கூறிய அனைத்​துக் குற்​றச்​சாட்​டு​களை​யும் முதல்​வர் படித்து இருக்​கிறார். இதெல்​லாம் சொல்​வது எதற்​காக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான். அதற்​கான சாட்​சிகளை திரட்டி வரு​கிறோம். நிச்​ச​யம் அவர்​கள்​ மேல்​ நடவடிக்​கை எடுப்​போம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

கடந்த ஆட்சியில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்: அமைச்சர் விக்னேஷ் தகவல்
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்: அதிமுக முன்னாள் எம்பிக்கு 2 ஆண்டு சிறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in