பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்படவில்லை: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்படவில்லை: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: ஆவினில் 100-க்​கும் மேற்​பட்ட பால் பொருட்​கள் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டிருப்​ப​தாக வெளி​யான தகவலை ஆவின் நிர்​வாகம் மறுத்​துள்​ளது.

தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் பால் பொருள்​கள் விற்​பனை செய்​யும் பணி​யில் ஆவின் நிறு​வனம் ஈடு​பட்டு வரு​கிறது.

ஆவின் வாயி​லாக, தினசரி 34 லட்​சம் லிட்​டர் மேல் பால் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது. இப்​பாலை பதப்​படுத்​தி, பலவகை​களில் பிரித்து விற்​பனை செய்​யப்​படு​கிறது.

இதுத​விர, பால் உப பொருள்​களான வெண்​ணெய், நெய், தயிர், பால்​கோவா உள்பட 225 வகை​யான பால் பொருள்​களை தயாரித்​து, ஆவின் பால​கங்​கள் மற்​றும் சில்​லறை விற்​பனை​யாளர்​கள் மூலம் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

சென்​னை​யில் தினசரி ரூ1.50 கோடி மதிப்​பிலான பால் மற்​றும் பொருட்​கள் விற்​பனை​யாகின. தற்​போது, ஆவினில் 100-க்​கும் மேற்​பட்ட பால் பொருட்​களின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யானது.

இதை மறுத்​துள்ள ஆவின் நிர்​வாகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவின் பால் பொருட்​களின் உற்​பத்தி நிறுத்​தம் குறித்த செய்​தி​கள் முற்​றி​லும் உண்​மைக்​குப் புறம்​பானவை.

ஆவின் நிறு​வனத்​தில் தயாரிக்​கப்​படும் எந்​தவொரு பொருளின் உற்​பத்​தி​யும் முழு​மை​யாக நிறுத்​தப்​பட​வில்​லை. நெய், வெண்​ணெய், பனீர், குக்​கீஸ் உள்​ளிட்ட அனைத்து வகை​யான பால் பொருட்​களும் வழக்​கம்​போல தயாரிக்​கப்​பட்​டு, விற்​பனை நிலை​யங்​களுக்​கும் சில்​லறை விற்​பனை முகவர்​களுக்​கும் விநி​யோகம் செய்​யப்​படு​கின்​றன.

தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்​டு, பல்​வேறு வகை​யான சிறப்பு இனிப்​பு​கள் தயாரிக்​கப்​பட்​டு, பல்​வேறு நிறு​வனங்​களுக்​கும் வாடிக்​கை​யாளர்​களுக்​கும் தேவைக்​கேற்ப விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

மேலும், விற்​பனை முகவர்​களிட​மிருந்து பெறப்​படும் தேவைக் கணிப்​புப் பட்​டியல்​களின் அடிப்​படை​யில், அவர்​களுக்​குத் தேவை​யான பால் பொருட்​களைத் தடை​யின்றி வழங்​கு​வதற்​கான நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்படவில்லை: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் 43 டன் அகற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in