சென்னையில் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் 43 டன் அகற்றம்

திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள பயன்படாத பொருட்களை அகற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள்.

திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள பயன்படாத பொருட்களை அகற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள்.

Updated on: 
1 min read

சென்னை: மாநக​ராட்சி சார்​பில் டெங்கு தடுப்பு நட​வடிக்​கை​யாக கொசு உற்​பத்தி ஆதா​ரங்​களான பழைய டயர்​கள், பிளாஸ்​டிக் உள்​ளிட்ட தேவையற்ற பொருட்​கள் சுமார் 43 டன் அளவுக்கு சேகரித்து அகற்​றப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: மாநக​ராட்​சிப் பகுதி​களில் அலு​வலர்​கள் மற்​றும் களப் பணி​யாளர்​களால் வீடுவீடாகச் சென்று டெங்கு உள்​ளிட்ட காய்ச்​சல் தடுப்பு நட​வடிக்​கைகள், கொசு ஒழிப்பு நட​வடிக்​கைகள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இதில் 3,703 பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

இதன் ஒரு பகுதி​யாக, கொசுப்​புழு உரு​வாக வாய்ப்​புள்ள டயர், தேங்​காய் ஓடுகள் உள்​ளிட்ட தேவையற்ற பொருட்​களைக் கண்​டறிந்து அகற்​றப்​பட்டு வரு​கிறது.

அக்.1 முதல் 24-ம் தேதி வரை 8,373 கிலோ பயன்​படுத்​தப்​பட்ட டயர்​கள் மற்​றும் 35,056 கிலோ தேவையற்ற பயன்​படுத்​தப்​படாத பிளாஸ்​ உள்​ளிட்ட பொருட்​கள் 43,429 கிலோ (43 டன்) கண்​டறியப்​பட்டு மாநக​ராட்​சிப் பணி​யாளர்​களால் அகற்​றப்​பட்​டன.

கொசுப்​புழுக்​கள் உற்​பத்தி கண்​டறியப்​பட்ட சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள், கட்​டு​மானப் பகுதி​கள், வீடுகள், வணிக வளாகங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை ரூ.37,05,500 அபராத​மாக வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் அக்​டோபர் மாதத்​தில் மட்​டும் ரூ.11,44,100 அபராதத் தொகை வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள் தங்​கள் வீடுகள், கட்​டு​மான நிறு​வனங்​கள், வணிக வளாகங்​கள், பெரிய அளவி​லான நிறு​வனங்​கள் உள்​ளிட்ட தங்​களது இடங்​களில் நீர் தங்​கு​வதற்​கான பழைய டயர்​கள், தொட்​டிகள், தேங்​காய் ஓடுகள் உள்​ளிட்ட தேவையற்ற பொருட்​களை அகற்றி, நீர்த் தேக்​கமின்றி வைத்து, மாநக​ராட்​சி​யின் டெங்கு தடுப்பு நட​வடிக்​கைகளுக்கு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும்.

<div class="paragraphs"><p>திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள பயன்படாத பொருட்களை அகற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள்.</p></div>
மதுரவாயலில் மேம்பாலப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புப் பொருட்களை திருடிய 3 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in