டிச.15-ல் மியூசிக் அகாடமியின் 99-ம் ஆண்டு இசை விழா: ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைக்கிறார்

டிச.15-ல் மியூசிக் அகாடமியின் 99-ம் ஆண்டு இசை விழா: ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

சென்னை: மியூசிக் அகாட​மி​யின் 99-வது ஆண்டு கருத்​தரங்​கம் மற்​றும் இசைத் திரு​விழா டிச.15-ம் தேதி தொடங்​கு​கிறது. தொடக்க விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்மான் பங்​கேற்​கிறார்.

இதுதொடர்​பாக சென்னை மியூசிக் அகாடமி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மியூசிக் அகாட​மி​யின் 99-வது ஆண்டு கருத்​தரங்​கம் மற்​றும் இசைத் திரு​விழா டிச. 15-ம் தேதி தொடங்​கி, 2026-ம் ஆண்டு ஜன. 1-ம் தேதி வரை சென்னை ஆழ்​வார்​பேட்டை டிடிகே சாலை​யில் உள்ள மியூசிக் அகாடமி அரங்​கில் நடை​பெறுகிறது.

இதில் தின​மும் பல்​வேறு கருத்​தரங்​கு​கள், இசை நிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன. இசை​விழாவை டிச.15-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரபல இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைக்​கிறார்.

2025-ம் ஆண்​டுக்​கான மியூசிக் அகாடமி விருதுகள் பெறும் கலைஞர்​களை அகாட​மி​யின் நிர்​வாக குழு கூடி, ஒரு​மன​தாக முடிவு செய்​தது.

அதன்​படி, இந்த ஆண்​டுக்​கான ‘சங்​கீத கலாநி​தி’ விருதுக்​கு, பிரபல கர்​னாடக வயலின் இசைக் கலைஞர் ஆர்​.கே.​ராம்​கு​மார் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.

‘சங்​கீத கலாநி​தி’ விரு​தாளர் என்ற வகை​யில், டிச. 15-ம் தேதி தொடங்​கி, ஜன.1-ம் தேதி வரை நடை​பெறும் மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை நிகழ்ச்​சிகள், கருத்​தரங்​கு​களுக்கு அவர் தலைமை வகிப்​பார்.

நிறைவு நாளான ஜன. 1-ம் தேதி மியூசிக் அகாட​மி​யில் சதஸ் நடை​பெறும். இந்​நிகழ்ச்​சி​யில் பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்​தின்

முன்​னாள் இசை பேராசிரியர் மற்​றும் துறைத் தலை​வர் டாக்​டர் என்​.​ராஜம் பங்​கேற்​று, தேர்வு செய்​யப்​பட்ட விரு​தாளர்​களுக்கு ‘சங்​கீத கலாநி​தி’, ‘சங்​கீத ஆச்​சார்​யா’, ‘டிடிகே இசை அறிஞர்’ விருதுகளை வழங்க உள்​ளார். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

டிச.15-ல் மியூசிக் அகாடமியின் 99-ம் ஆண்டு இசை விழா: ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைக்கிறார்
ஆக்‌ஷன் ஹீரோ கட்சியின் ‘வளைப்பு’ வேலை | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in