Published : 15 Jul 2014 12:00 PM
Last Updated : 15 Jul 2014 12:00 PM

ஆற்றில் சடலமாகக் கிடந்த மாணவி யார்?: போலீஸார் தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் சரகத்துக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு என்கிற இடத்தில் ஆற்றுக்குள் சடலமாக காணப்பட்ட மாணவி யார் என்று கண்டுபிடிக்க கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இரு மாவட்ட போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் சரகத்துக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு பகுதி யில் சுமார் 16 வயதுள்ள ஒரு பள்ளி மாணவியின் சடலம் கிடந் தது. அந்த மாணவியின் பைக்குள் பள்ளிச் சீருடையைத் தவிர காயத்ரி டைலர்ஸ், சீர்காழி என்கிற முகவரி உள்ள இரண்டு மாற்று உடைகளும் இருந்துள்ளன.

மாணவியின் சடலம் கிடந்தது தெரியவந்து 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்த மாணவி யார் என்பது கண்டறி யப்படவில்லை.

இதற்காக கடலூர் மாவட்ட போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து விசாரணை செய்து வருவது டன், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை முதல் நாகை மாவட்டம் சீர்காழியில் முகா மிட்டு விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

தையலக முகவரியை அடிப்படையாக வைத்து நாகை மாவட்ட போலீஸாரின் உதவி யுடன் சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று மாணவிகள் யாராவது தொடர்ந்து வகுப்புக்கு வராமல் இருக்கிறார்களா என்றும், அரசு விடுதிகளுக்குச் சென்று மாணவி யாராவது காணாமல் போயி ருக்கிறார்களா என்றும் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

நாகை மாவட்ட காவல் நிலையங்களில் மாணவி யாரும் காணாமல் போனதாக புகார்கள் எதுவும் இல்லாத நிலையில், கல்வித் துறையின் சார்பில் பள்ளிக்கு வராத மாணவிகளின் விவரம் சரிபார்க்கும் பணி ஒவ்வொரு பள்ளியாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சீர்காழி அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் போலீஸார் அங்கு பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தும், ஒலி பெருக்கி வாயிலாக தகவல்களை தெரிவித்தும் மாணவி பற்றிய தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு வருகிறார்கள்.

மாணவி பற்றிய விவரம் தெரிந்தால் 04142-284350, 04144-222257, 238203, 94981 54500, 94981 54310, 94863 47058 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸார் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x