Published : 22 May 2023 02:48 PM
Last Updated : 22 May 2023 02:48 PM

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 2011-12 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண் 177ன்படி (11.11.2011) 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் உடற்கல்வி, கணினிப் பயிற்சி, தையல், இசை, ஓவியம், தோட்டக் கலை, கட்டடக் கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப் பிரிவிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும், பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஈடுபட இருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் இவர்களின் கோரிக்கையை ஏற்று இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து தருமாறு தமிழ்நாடு அரசிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x