Published : 18 May 2023 05:42 AM
Last Updated : 18 May 2023 05:42 AM

கள்ளச்சாராய உயிரிழப்பு | இவ்வளவு பேர் கைது செய்யப்பட்டது ஏன்? - ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

சென்னை: விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேரும் உயிரிழந்தனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரசாயன ஆலை அதிபர், விற்பனையாளர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரழந்த விவகாரத்தில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கள்ளச்சாரய உயிரிழப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தெல்லாம், அந்த அறிக்கையில் விவரமாகத் தெரிவிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படவில்லை என்றால், இவ்வளவு பேர் கைது செய்யப்பட்டது ஏன் என்று ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளதாகவும் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x