பிளஸ் 2 தேர்வு முடிவுகள் |  சிறைவாசிகள் 87.78 சதவீதமும், மாற்றுத்திறனாளிகள் 89.20 சதவீதமும் தேர்ச்சி 

தேர்வு எழுதிய சிறைவாசிகள்
தேர்வு எழுதிய சிறைவாசிகள்
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 2 தேர்வில் சிறைவாசிகள் 87.78 சதவீதமும், மாற்றுத்திறனாளிகள் 89.20 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,451. தேர்ச்சி சதவீதம் 94.03%. மாணவியர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 4,05,753. தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697. தேர்ச்சி சதவீதம் 91.45. மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதினர். இதில், 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி பார்த்தால், 87.78 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 4398 பேர் தேர்வு எழுதினர். இதில் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.20 சதவீதம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in