Published : 06 Sep 2017 09:02 AM
Last Updated : 06 Sep 2017 09:02 AM

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

மருத்துவப் படிப்பு கனவு நிறைவேறாததால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்கு நீதி கேட்டு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் கதிர்வேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது டாக்டர் கதிர்வேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறத்தில் இருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் படிக்க முடியாததால், அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனிதா தெரிவித்து சென்றுள்ளார். நீட் தேர்வு என்பது பயிற்சி வகுப்புகள். பணம் சம்பாதிக்கவே வழி செய்யும். மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தி திணிப்பை யும் கைவிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x