Published : 12 Sep 2017 09:07 AM
Last Updated : 12 Sep 2017 09:07 AM

ஷீரடிக்கு ஆன்மிக சிறப்பு ரயில் செப்டம்பர் 28-ம் தேதி புறப்படும்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து ஷீரடிக்கு ஆன்மிக சிறப்பு ரயில் வரும் 28-ம் தேதி புறப்படும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறப்பு ரயில்களை இயக்கி பல்வேறு விதமான சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள பல்வேறு ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஷீரடிக்கு..

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஐஆர்சிடிசி மூலம் பல்வேறு தளங்களுக்கு இதுவரையில் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், வரும் 28-ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக பண்டரிபுரம், ஷீரடி, மந்தராலயம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 7 நாட்கள் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.5,880 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை அடங்கும். இது தொடர்பாக மேலும் தகவல்களைப் பெற 9003140681 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x