சமூக நலன் - மகளிர் உரிமை துறைக்கு ரூ.9,818 கோடி | தமிழக பட்ஜெட் 2026-27

சமூக நலன் - மகளிர் உரிமை துறைக்கு ரூ.9,818 கோடி | தமிழக பட்ஜெட் 2026-27
Updated on
1 min read

சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராக கருதும் முதல்வர், அப்பெண்களின் திருமண நன்னாளில் அரசின் சார்பாக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் அண்ணனின் சீராக வழங்கவுள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பெரியார் பிறந்தநாளான செப். 17 முதல் செயல்படுத்தப்பட உள்ள காமராஜர் காலை உணவுதிட்டத்தின் மூலம், கூடுதலாக 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் இல்லங்கள், மருத்துவ வசதிகளுடன் பராமரிப்பாளர்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் விரிவுபடுத்தப்படும். முதலாமாண்டில் 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இத்திட்டத்துக்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 500 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் நடப்பாண் டில் கட்டப்படும்.

திருநர்கள் தொழில் தொடங்குவதற்கும். நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் மானியத்துடன் இணைந்த வங்கி கடன் வசதிவழங்கப்படும்.

நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம்வரை சுயதொழில் மானியத்துடன் வங்கி கடன் பெற ஊக்குவிக்கப்படுவர். 5 மாவட்டங்களில் அவர்களுக்கு அரண் தங்குமிட வசதி நிறுவப்படும். மேலும், 15 மாவட்டங்களில் குறுகியகால தங்குமிட வசதிகள் நிறுவப்படும். இவ்வாறு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு மொத்தம் ரூ.9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

சமூக நலன் - மகளிர் உரிமை துறைக்கு ரூ.9,818 கோடி | தமிழக பட்ஜெட் 2026-27
அண்ணன் சீர் முதல் ‘வெற்றி’ திட்டங்கள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in