Published : 12 Sep 2017 11:07 AM
Last Updated : 12 Sep 2017 11:07 AM

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது: பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்பு

அதிமுக அணிகள் இணைப்புக்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இன்று பொதுக்குழு கூட்டம் தொடங்கி உள்ளது. முதலில் செயற்குழு கூட்டம் தொடங்கி உள்ளது.

அதிமுக அம்மா, புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் சமீபத்தில் எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டத்தினை எடப்பாடி பழனிசாமி கூட்டினார். அதில் 12 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டுவது சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

12 ஆம் தேதி கூட்டப்படும் பொதுக்குழு செல்லாது என்று தினகரன் தரப்பினர் கூறிவந்த நிலையில் பொதுக்குழு கூட்ட எதிர்ப்புத் தெரிவித்து தினகரன் தரப்பு எம்.எல்.ஏ வெற்றிவேல் நீதிமன்றம் சென்றார். ஆனால் பொதுக்குழு கூட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் திட்டமிட்டப்படி பொதுக்குழு கூட்டம் இன்று வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் தொடங்கியது. பொதுக்குழு நடப்பதை ஒட்டி ஏராளமான கட்சித்தொண்டர்கள் குவியத்தொடங்கினர். வாகனங்களில் பொதுக்குழு உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டனர்.

எங்கு காணினும் பேனர்கள் கட்டப்பட்டு வானகரம் முழுதும் பரபரப்பாக காணப்படுகிறது. பொதுக்குழுவுக்கு முன்னர் செயற்கு கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் 57 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கான அஜெண்டா தீர்மானிக்கப்படும். எந்த வகையான தீர்மானங்கள் நிறைவேற்றலாம் என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கும். இதில் தமிழகம் முழுதும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 2540 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுவாக பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படுவர். இந்த முறை சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x