Published : 08 Apr 2023 06:00 AM
Last Updated : 08 Apr 2023 06:00 AM

சேலம், ஈரோடு வழியாக ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கம்: கோவையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

சேலம்: சேலம், ஈரோடு வழியாக சென்னை- கோவை இடையே இன்று ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இதன் காரணமாக, கோவையில் இருந்து புறப்படும் சில ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றியமைக்கப்படுகிறது.

சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (8-ம் தேதி) தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து நாளை (9-ம் தேதி) முதல் சென்னை- கோவை இடையே இரு மார்க்கத்திலும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் (புதன்கிழமை தவிர) தினமும் இயக்கப்படுகிறது.

கோவை- சென்னை ‘வந்தே பாரத்’ ரயில் (எண்.20644), கோவையில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, திருப்பூர் 6.35 மணி, ஈரோடு காலை 7.12 மணி, சேலம் காலை 7.58 மணி என வந்தடைந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நண்பகல் 11.50 மணிக்கு சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்- கோவை ‘வந்தே பாரத்’ ரயில் (எண்.20643) சென்னை சென்ட்ரலில், மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு, சேலம் மாலை 5.48 மணி, ஈரோடு மாலை 6.32 மணி, திருப்பூர் மாலை 7.13 மணிக்கு வந்து, கோவையை இரவு 8.15 மணிக்கு சென்றடைகிறது.

இதனிடையே, சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கப்படுவதை முன்னிட்டு, கோவையில் இருந்து இயக்கப்படும் இன்டர்சிட்டி, கோவை- பெங்களூரு டபுள் டெக்கர் விரைவு ரயில், கோவை- திருப்பதி விரைவு ரயில் ஆகியவற்றின் இயக்க நேரம் நாளை (9-ம் தேதி) முதல் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை-பெங்களூரு இடையிலான டபுள் டெக்கர் விரைவு ரயில் (எண். 22666), கோவையில் இருந்து காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பூர் காலை 6.18 மணி, ஈரோடு காலை 7.05 மணி, சேலம் காலை 8.02 மணிக்கு வந்து, 8.05 மணிக்கு வந்து, பின்னர் பெங்களூரு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்கத்தில் பெங்களூரு- கோவை டபுள் டெக்கர் விரைவு ரயில் (எண்.22655), பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, சேலம் மாலை 5.52 மணி, ஈரோடு மாலை 6.50 மணி, திருப்பூர் இரவு 7.38 மணிக்கு வந்து, கோவையை இரவு 9 மணி வந்தடையும் வகையில் புதிய நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கோவை - திருப்பதி ரயில்: இதேபால், கோவை- திருப்பதி ரயில் (எண்.22616) கோவையில் காலை 6.10 மணிக்குப் புறப்பட்டு, திருப்பூர் காலை 6.48 மணி, ஈரோடு காலை 7.30 மணி, சேலம் 8.27 மணி, ஜோலார்பேட்டை காலை 10.03 மணிக்கு வந்து, பின்னர் திருப்பதி சென்றடையும்.

இன்டர்சிட்டி ரயில்: கோவை -சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி விரைவு ரயில் (எண்.12680), கோவையில் இருந்து காலையில் 6.20 மணிக்குப் புறப்பட்டு, திருப்பூர் காலை 7 மணி, ஈரோடு காலை 7.45 மணி, சேலம் காலை 8.42 மணி, பொம்மிடி காலை 9.14 மணி, மொரப்பூர் காலை 9.33, சாமல்பட்டி காலை 9.54 மணி, ஜோலார்பேட்டை காலை 10.33 மணி என வந்தடைந்து, சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு மதியம் 1.50 மணிக்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில், சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயிலானது (எண்.12679), சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்குப் புறப்பட்டு, ஜோலார்பேட்டைக்கு மாலை 5.33 மணிக்கு வந்தடையும் வகையில் நேர மாற்றம் செய்யப் பட்டுள்ளது. என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x