Published : 20 Sep 2017 07:46 AM
Last Updated : 20 Sep 2017 07:46 AM

முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் கல்வி பயில வாய்ப்பு: வரும் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிரிட்டிஷ் துணைத் தூதர் பரத் ஜோஷி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இங்கிலாந்தில் கல்வி பயின்றுவிட்டு, தங்களது சொந்த நாட்டில் பணியாற்றுவதற்கான எதிர்கால தலைவர்களை உருவாக்கும் வகையில் ‘செவனிங்’ என்ற கல்வி திட்டத்தை இங்கிலாந்து அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2 வகை யான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. முதலாவது திட்டத்தின்படி, முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளை (ஒரு ஆண்டு) படிக்க லாம்.

அவ்வாறு விண்ணபிக்க இந்திய குடிமகனாக இருக்கவேண்டும். இங்கிலாந்தில் படிப்பை நிறைவுசெய்துவிட்டு, 2 ஆண்டுகளில் சொந்த நாட்டுக்கு திரும்புபவராக இருக்கவேண்டும். அதோடு, இளநிலை பட்டப்படிப்பை நிறைவுசெய்திருப்பதோடு, 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாவது திட்டத்தின் கீழ், ஏற்கெனவே ஏதாவது ஒரு பணியில் இருப்பவர்கள் அந்த துறையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள உத வும் 8 முதல் 12 வாரங்கள் வரையி லான குறுகிய கால படிப்பை பயில லாம்.

இதில், அறிவியல், நிதி சேவைகள், இணைய பாதுகாப்பு, கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்காலம். செவனிங் திட்டத்தின்கீழ் வரும் கல்வியாண்டில் பயில 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, 2018-19-ம் கல்வி ஆண்டில் இங்கிலாந்தில் பயில விரும்புவோர் வரும் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடு தல் விவரங்களை www.chevening.org/india என்ற இணையதள முகவரி யில் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x