Published : 29 Mar 2023 06:15 PM
Last Updated : 29 Mar 2023 06:15 PM

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2022-23-ல் ரூ.4,978 கோடி நஷ்டம் - மாதத்துக்கு ரூ.452 கோடி இழப்பு

அரசு பேருந்துகள் | கோப்புப் படம்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் 2022 - 2023-ம் நிதியாண்டில் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துறையின் கீழ் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், 2022 - 2023-ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், இயக்க மூலம் ரூ.6,705.69 கோடியும், இயக்கம் அல்லாதவைகள் மூலம் ரூ.5,256.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த கால கட்டத்தில் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,978.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ரூ.452.58 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனாவிற்கு முந்தைய 2019 20-ம் நிதியாண்டில் ரூ.5230 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.435.88 கோடி இழப்பு ஏற்பட்டது. கரோனா காலத்தில் 2020-21-ம் நிதியாண்டில் ரூ.8328 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.694.58 கோடியும், 2021 - 22ம் நிதியாண்டில் ரூ.6622.21 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.551.85 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவிற்கு பிறகு இந்த நிதியாண்டில் நஷ்டம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x