அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு: வெற்றிச் சான்றிதழ் ஒப்படைப்பு

சான்றிதழை பெற்றுக் கொண்ட இபிஎஸ்
சான்றிதழை பெற்றுக் கொண்ட இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை (மார்ச் 29) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

அதிமுக பொதுக் வழக்கு தொடர்பான செய்திகளை வாசிக்க:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in