Published : 13 Sep 2017 08:00 AM
Last Updated : 13 Sep 2017 08:00 AM

தமிழகம் முழுவதும் அனைத்து நகராட்சிகளிலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் இணையதளம் மூலம் பெறலாம்

தமிழகம் முழுவதும் அனைத்து நகராட்சிகளிலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூல மாக பெறும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 124 நகராட்சிகள் உள்ளன. இங்கு பிறப்பு, இறப்பு சான்று வாங்க நகராட்சியில் சென்று பதிவு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்திய பிறகு சான்றுகள் பெறும் நிலை இருந்தது. தற்போது அனைத்து நகராட்சிகளிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறவும், வரி இனங்கள் செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. tnurbanepay.tn.gov.in என்ற இணையத்தில் இவற்றை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து நகராட்சியின் பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நகராட்சி பகுதிகளில் பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவது நகராட்சி நிர்வாகங்களின் பொறுப்பாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் பிறப்புச் சான்றிதழ் பணிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக 10 நகராட்சிகள்

முதல் கட்டமாக பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றுகளை இணையத்தில் பெறலாம். இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இணைய சேவை நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x