Last Updated : 20 Mar, 2023 06:18 AM

 

Published : 20 Mar 2023 06:18 AM
Last Updated : 20 Mar 2023 06:18 AM

கடலூர், திருச்சி உட்பட 5 மாவட்டங்களுக்கு ‘மாணவர் காவல் படை திட்டம்' விரிவாக்கம்: மாணவ, மாணவிகளை தேர்வு செய்யும் பணி தீவிரம்

திருச்சி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை சமுதாய பொறுப்புள்ள வர்களாக மாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட மாணவர் காவல் படைத் திட்டத்தை திருச்சி,மதுரை, கடலூர், தர்மபுரி, தூத்துக்குடி என மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா ஊரடங்குக்குப் பிறகு தமிழகத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ சமுதாயத்தின ரிடம் கல்வி மீதான நாட்டம்,நல்லொழுக்கம் குறைந்துள்ளது டன், செல்போன் பயன்பாடு மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தாக்கம் அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாணவர்களை நல்லொழுக்கம் கொண்ட, சமுதாயப் பொறுப்புள்ள, திறமையா னவர்களாக உருவாக்கும் நோக் கில் தமிழக காவல் துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து 'மாணவர் காவல் படைத் திட்டம்' என்ற திட்டத்தைக் கொண்டு வந்தன.

இந்தத் திட்டம் முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,118 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி, கடலூர், தர்மபுரி, மதுரை,தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகளில் தமிழககாவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இந்தத் திட்டத்துக்காக, 5 மாவட்டங்களில் இருந்தும் குறிப் பிட்ட சில அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பள்ளிகளில் 8, 9-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் தேர்வு செய் யப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியது: மாணவர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், சமுதாயத்தில் மாணவர்களை செம்மைப் படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், பள்ளியின்தலைமையாசிரியர் உள்ளிட்டோ ரைக் கொண்ட குழு அமைக்கப் படும்.

அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, தலைமைப் பண்புக்கான தகுதிகள், குழந்தை திருமணம்தடுப்பு, வரதட்சணை ஒழிப்பு, போதைப்பொருள் மறுப்பு, நன்ன டத்தை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்து மாதந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

மேலும் குடும்பம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவை மேம்பட சிறப்பான பங்களிப்பை அளிப்பதற்கும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக் கப்படும். 5 மாவட்டங்களிலும் இத்திட்டத்தின்கீழ் பயனடைய உள்ள பள்ளிகள் மற்றும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப் பட்டவுடன் முறைப்படி இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருச்சி மாவட்டத்தில்... இந்தத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் அயிலாப்பேட்டை, சிறுகாம்பூர், சோமரசம்பேட்டை, மண்ணச்சநல்லூர் ஆண்கள், மண்ணச்சநல்லூர் பெண்கள், மூவானூர், இனாம்குளத்தூர், திருவெறும்பூர் முக்குலத்தோர், காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள், துவாக்குடி, லால்குடி, புள்ளம்பாடி, பெருவளப்பூர், கொசவம்பட்டி, பாலசமுத்திரம், ஏழூர்பட்டி, மருங்காபுரி, கனிவடுகப்பட்டி, வையம்பட்டி,புத்தாநத்தம் ஆகிய 20 அரசுப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளன. தொடர்ந்து, இந்தப் பள்ளிகளில் இருந்து தலா 22 மாணவ, மாணவிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x