Published : 18 Mar 2023 01:32 PM
Last Updated : 18 Mar 2023 01:32 PM

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

ஆலோசனைக் குழு கூட்டம்

சென்னை: முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது, அரசின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களையும், சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பாகவும், மாநிலத்தின் மொத்த நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும், மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து வலுவான ஆலோசனை வழங்கிடும் மையமாக இக்குழு விளங்குகிறது.

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் 9.7.2021 அன்றும், இரண்டாவது கூட்டம் 25.10.2021 அன்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்றிரவு (மார்ச் 17) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழக அரசின் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றி, ஆலோசனைகளை வழங்கி வருவதற்கு இக்குழுவிற்கு நன்றி தெரிவித்து, குழுவின் ஆலோசனைகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், நிதி மேலாண்மைக்கும் மிக முக்கியமானவை என்று தெரிவித்தார்.

மேலும், இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து நிறைவேற்றிய திட்டங்களை பற்றி முதல்வர் எடுத்துரைத்து, விரைவில் வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி, செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து குழுவின் மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x