Published : 26 Feb 2023 07:16 AM
Last Updated : 26 Feb 2023 07:16 AM

திமுக ஆட்சியை எடைபோடும் இடைத்தேர்தல் - நல்ல தீர்ப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஈரோடு: இந்த ஆட்சி முறையாக நடக்கிறதா என்பதை எடை போடும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங் கோவனை ஆதரித்து சம்பத் நகர், பிராமண பெரிய அக்ரஹாரம், பெரி யார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:

திமுக ஆட்சி அமைந்ததும், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக் கான காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். ஆனால், தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்தத் திட்டத்தையும் நிறை வேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறி வருகிறார். நான் பட்டியலிட்ட திட்டங்களைபார்த்தாவது அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசு 2 முறை நிறைவேற்றி அனுப்பிய ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநரோ, மத்திய அரசோ சிந்திக்கவோ, கவலைப்படவோ இல்லை. ஆனால் எனது ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்குரிய விலக்கை பெற்றுவிட வேண்டும் என்பதே லட்சியம். அதை நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளிலும் ஈடு பட்டு வருகிறோம்.

சிறுபான்மை மக்களை அச் சுறுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மாநிலங்க ளவையில் அதிமுக வாக்களித்ததால்தான், அந்த சட்டம் நிறைவேறி யது. இதை கவனத்தில்கொண்டு இத்தேர்தலில் அதிமுகவுக்கு சிறுபான்மை மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப் பட்ட விசாரணை ஆணையம் அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகள் செயல்படாமல் பெயரளவில் இருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு, ஆணையத்தின் அறிக்கையை சட்டப்பேரவையில் வெளியிட்டோம். இதுபோல கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.

நாடும், மொழியும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அமைந்த திமுக தேர்தல் கூட்டணி, கொள்கை கூட்டணியாகும். அதிமுக அமைத்துள்ள கூட்டணி எத்தகையது குறித்து என மக்களுக்கு தெரியும். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெயரைக்கூட, பழனிசாமி சொல்லவில்லை.

இந்த ஆட்சி முறையாக நடக்கிறதா என்பதை, எடைபோடும் இந்த இடைத்தேர்தலில், வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நடந்து சென்று வாக்கு சேகரிப்பு: முன்னதாக ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து வேன் மூலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின்போது, அதிமுக ஆட் சியில் அறிவிக்கப்பட்டு நிறைவேற் றப்படாத இலவச செல்போன், மினரல் வாட்டர், 3 சென்ட்நிலம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசினார். ஈரோடு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியலையும் வாசித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x