Published : 25 May 2017 08:47 AM
Last Updated : 25 May 2017 08:47 AM

அலோபதி மருத்துவர்களுக்கு சித்த மருத்துவம் குறித்த பயிற்சி

அலோபதி மருத்துவர்களுக்கு சித்த மருத்துவ முறை குறித்த பயிற்சி முகாம் தாம்பரத்தில் நடைபெற்றது.

இந்திய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா, வர்மா, யுனானி, இயற்கை மற்றும் யோகா போன்ற மருத்துவ முறைகள் இந்தியாவில் உள்ளது. இதே போல் ஜெர்மானிய மருத்துவ மான ஹோமியோபதி மருத்துவ மும் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவமும் நடை முறையில் உள்ளது. அலோபதி மருத்துவர்கள் இந்திய மருத் துவ முறைகளையும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் தாம் பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ஐந்து நாள் பயிற்சி முகாம் நடை பெற்றது. இதில் மத்திய அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சித்த மருத்துவம் தொடர்பாக சித்த மருத்துவத்தின் அடிப்படை தத்துவங்கள், மருந்து தயாரிப்பு முறைகள், சிகிச்சை முறைகள், மருந்து செயல்படும் விதம், 32 விதமான புற மற்றும் உள் மருத்துவ சிகிச்சை, குணப் படுத்தும் நோய்கள், அவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் பானுமதி கூறியதாவது:

இந்தியாவில் நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை அலோபதி மருத்துவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு புதியதாக மத்திய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய தேர்வாகியுள்ள அலோபதி மருத்துவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இந்திய மருத்துவ முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சித்த மருத்துவ முறைகள் குறித்து அலோபதி மருத்துவர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஒரு நோயாளிக்கு எந்த மருத்துவத்தில் சிகிச்சை அளித் தால் நோய் எளிதில் குணமடையும் என்பதை மருத்துவர்கள் தெரிந்து கொண்டு அதன்படி சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் தீர்வு கிடைக்கும். இதற்காகவே இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் இந்த திட்டம் இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x