Published : 27 May 2017 09:00 AM
Last Updated : 27 May 2017 09:00 AM

தமிழகத்தில் முதல்முறையாக துணைவேந்தர் நியமனத்துக்கு ஆளுநர் நேர்காணல்: ராஜ்பவனில் 5 மணி நேரத்துக்கு மேல் நடந்தது

தமிழகத்தில் முதல்முறையாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் களை தேர்வுசெய்ய ஆளுநர் நேர் காணல் நடத்தியுள்ளார். ராஜ்ப வனில் நடந்த இந்த நேர்காணல் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

தமிழகத்தில் சென்னை பல்கலை., அண்ணா பல்கலை., மதுரை காமராஜர், திருச்சி பாரதி தாசன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. உட்பட 20 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பை துணை வேந்தர் வகிக்கிறார். அனைத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்த ராக ஆளுநரும், இணைவேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் இருப்பார்கள். மருத்துவம், கால் நடை மருத்துவம், மீன்வளப் பல் கலைக்கழங்களுக்கு மட்டும் அந்தந்த துறை அமைச்சர்கள் இணை வேந்தர்களாக இரு ப்பார்கள்.

பல்கலைக்கழகத் துணைவேந் தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். துணைவேந்தர் பதவி காலியாகும் போது, புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய தேர்வுக்குழு அமைக்கப்படும். இக்குழு 3 பேரை பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை, வேந்தரான ஆளுநர் துணைவேந்தராக நியமனம் செய்வது வழக்கம்.

சென்னை, அண்ணா, மதுரை காமராஜர் ஆகிய 3 பல்கலைக் கழகங்களிலும் நீண்ட காலமாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதனால், உயர்கல்வித் துறை செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுதான் அந்தப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பணிகளை தற்காலிகமாக கவனித்து வருகிறது.

இதற்கிடையில், இந்த 3 பல் கலைக்கழகங்களுக்கும் புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழுக்கள் அமைக் கப்பட்டன. அக்குழுக்களும் பெயர் பட்டியலை ஆளுநரிடம் வழங்கின.

இந்நிலையில், தேர்வுக்குழுக் களால் பரிந்துரை செய்யப்பட்ட நபர்கள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று வரவழைக்கப்பட்டனர். வேந்தரான ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவர்களிடம் நேர்காணல் நடத்தியுள்ளார். காலையில் சென்னை, காமராஜர் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர் களை தேர்வுசெய்வதற்கும், பிற்பகல் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தரை தேர்வுசெய்வதற்கும் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணல் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேர்காணல் நடத்தி முடிக் கப்பட்டுள்ள நிலையில், சென்னை, அண்ணா, காமராஜர் ஆகிய 3 பல்கலைக்கழங்களுக்கும் புதிய துணைவேந்தர் நியமனம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, காமராஜர் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர் களை தேர்வுசெய்வதற்கும், பின்னர் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தரை தேர்வுசெய்வதற்கும் நேர்காணல் நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x