Published : 18 May 2017 09:11 AM
Last Updated : 18 May 2017 09:11 AM

புதுச்சேரி முன்னாள் முதல்வரின் உடல் தகனம்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி(83), புதுச்சேரி வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கடந்த மே 15-ம் தேதி காலமானார். அவரது உடல், சொந்த ஊரான காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டு காரைக்கால் வீராசாமி நாயக்கர் வீதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நேற்று காலை அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட் டது. இதில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காரைக் கால் பச்சூர் பகுதியில் உள்ள சுடு காட்டில் அவரது உடல் 21 குண்டு கள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் ராஜா தணிகை நாயகம் தீ மூட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x