Published : 31 May 2017 07:59 AM
Last Updated : 31 May 2017 07:59 AM

தலைமைச் செயலகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் ஓய்வு: 21 துறைகளில் பணியாற்றியவர்கள்

தலைமைச் செயலகத்தில் 21 வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 45 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர்.

தமிழக தலைமைச் செயலகத்தில் 34 துறைகள் உள்ளன. இவற்றில் செயலர் முதல் கடை நிலை ஊழியர் வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி களைத் தவிர தமிழக அரசில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆகும். அரசு ஊழியர் ஒருவர் 58 வயது நிறைவடையும் போது, பிறந்த மாத அடிப்படையில் அந்த மாத இறுதியில் ஓய்வு பெறுவார்.

இந்நிலையில், இன்றுடன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர், துப்புரவாளர் முதல் செயலர் வரை 21 துறைகளைச் சேர்ந்த 45 பேர் ஓய்வு பெறுகின்றனர். இவர்களில் முதன்மையானவர் சட்டப்பேரவை செயலர் அ.மு.பி.ஜமாலுதீன். இவருடன் அதே துறையைச் சேர்ந்த 9 பேரும், நிதித்துறையில் 10 பேரும், பொதுத்துறையில் 8 பேரும், சட்டத்துறையில் இருவரும், சிறப்பு திட்ட செயலாக்கம், கால்நடைத்துறை, வேளாண் துறை உள்ளிட்ட மற்ற துறைகளில் தலா ஒருவரும் என 45 பேர் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகின்றனர்.

இதில், சட்டப்பேரவைச் செய லகத்தில் கூடுதல் செயலர், துணைச் செயலர் நிலையில் இருப் பவர்களும் ஓய்வு பெறுகின்றனர். மேலும், நிதித்துறையில் ஒரே நாளில் 5 இணை, 3 துணைச் செயலர்கள் ஓய்வு பெறுகின்றனர். இவர்கள் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. சில பணியிடங்களுக்கு புதியவர்கள் விரைவில் துறைவாரியாக தேர்வு செய்யப்படுவார்கள் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x