Published : 12 May 2017 10:55 AM
Last Updated : 12 May 2017 10:55 AM

பிளஸ் 2 தேர்வு முடிவுகளால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தடுக்க உதவி மையம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளால் மாணவர்கள் விரக்தி அடைவதைத் தடுக்க, கோவையில் சைல்ட்லைன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்டவை சார்பில் ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. அரசு வெளியிட்டுள்ள புதிய நடைமுறைப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால் மாணவ, மாணவியரும், பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இதில் குறைவான மதிப்பெண்கள் பெற்று மாணவ, மாணவிகள் மன விரக்தி அடைவதைத் தடுக்க சைல்ட் லைன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்டவை முன் முயற்சி எடுத்துள்ளன.

இது குறித்து சைல்ட் லைன் நிர்வாகிகள் கூறியதாவது: மதிப்பெண் குறைந்தால் மாணவ, மாணவியர் இயல்பாகவே மன அழுத்தம், விரக்தி, குழப்பம் போன்ற சூழலுக்கு தள்ளப்படுவர். அப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தைரியப்படுத்த வேண்டியது கட்டாயம். இதற்காக மாணவ, மாணவியருக்கான இலவச ஆற்றுப்படுத்துதல் சேவை குழு தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு 0422- 2455305 என்ற எண்ணிலும், 104 என்ற எண்ணில் மருத்துவ உதவிக்கும், 9487424223 என்ற எண்ணில் சைல்ட் லைனுக்கும், ஆஷா ஆற்றுப்படுத்துதல் மையத்துக்கு 9865258463 என்ற எண்ணிலும், வழிகாட்டி மனநல மருத்துவ மையத்துக்கு 9865258463 என்ற எண்ணிலும், சுமை தாங்கி தற்கொலை தடுப்பு உதவி மையத்துக்கு 0421 - 2472472 என்ற எண்ணிலும் அழைத்து ஆலோசனைகளைப் பெறலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x