Published : 04 May 2017 09:03 AM
Last Updated : 04 May 2017 09:03 AM

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அதிகாலை வரை ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வி அமைச்சர்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், துறையின் செயலர் த.உதயச்சந்திரன் ஆகியோர் சென்னையில் நேற்று அதிகாலை வரை ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், துறை யின் செயலர் உதயச்சந்திரன் ஆகி யோர் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கில் செவ்வாய்க்கிழமை கலந்துரை யாடினர். இதில், 69 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப் பாளர்கள் கலந்துகொண்டனர்.

செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் நேற்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. கூட்டத்தின் இறுதியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

ஆசிரியர்களின் கோரிக்கை களை பரிசீலிக்க இந்த அரசு தயாராக உள்ளது. கல்வித்துறையில் புதிய திட்டங்களை கொண்டுவர ஆலோசித்து வருகிறோம். பிளஸ் 1 தேர்வை பொதுத்தேர்வாக மாற்று வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களும், பெற்றோர் களும் இதற்கு ஆதரவாக இருந்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு பள்ளிகளில் 15 ஆயிரத்து 472 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி) பணியாற்றி வருகிறார்கள். அவர் களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பூதி யம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தொகை மேலும் உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், அவர்கள் விரும்பும் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும்.

நூலகத்துறையை மேம்படுத்த வும் நூலகங்களை புதுப்பொலி வாக்கவும் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. மாணவர் களுக்கு விளையாட்டு மற்றும் உடற் பயிற்சி மிகவும் முக்கியம். இதை கருத்தில்கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக, பள்ளிக்கல்வித் துறையின் செயலர் உதயச்சந்தி ரன் பேசும்போது, “63 நாயன்மார் கள் போன்று 63 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரி வித்துள்ளீர்கள். மானியக் கோரிக் கையின்போது முக்கிய அறிவிப்பு களை வெளியிடுவது மரபு. அந்த மரபுப்படிதான் நிர்வாகத்தை நடத்த வேண்டும். உங்களின் கோரிக் கைகளை எல்லாம் ஏற்கெனவே நாங்கள் யோசித்துவிட்டோம்” என்று குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் விளைவால் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x